For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கூடங்குளம் போராட்டக்குழுவினர் நாட்டின் ஒற்றுமையை சீர்குலைக்கும் ரகசியங்களைக் கேட்கின்றனர்: தங்கபாலு

Google Oneindia Tamil News

நெல்லை: கூடங்குளம் போராட்டக் குழுவினர் நாட்டின் ஒற்றுமைக்கும், இறையாண்மைக்கும் ஆபத்து விளைவிக்கும் வகையில் ரகசிய தகவல்களை கேட்டு வருகின்றனர். அதற்கெல்லாம் பதிலளிக்க முடியாது என்று முன்னாள் மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர் தங்கபாலு தெரிவித்துள்ளார்.

பாளையங்கோட்டையில் நேற்று காங்கிரஸ் பொதுக்கூட்டம் நடந்தது. அதில் அக்கட்சியின் முன்னாள் மாநில தலைவர் தங்கபாலு கலந்து கொண்டு பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது,

கூடங்குளம் அணுமின் நிலையம் குறித்து ஏற்பட்டுள்ள சந்தேகங்களை நிவர்த்தி செய்யும் வகையில் தமிழக அரசு குழுவினருடன், போராட்டக் குழுவை சேர்ந்தவர்களும் பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்தனர்.

அப்போது அணுமின் நிலைய பாதுகாப்பு அம்சங்கள் குறித்து தெரிவித்த பிரதமர் தமிழகம் மட்டுமல்ல இந்தியாவின் மற்ற மாநிலங்களுக்கும் எந்தவித பாதகமும் ஏற்படுத்தும் வகையில் மத்திய அரசு செயல்படாது என்று உறுதியளித்தார்.

போராட்டக் குழுவுடன் மத்திய, மாநில அரசுக் குழுவினரும் 3 முறை பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். ஆனால் இந்தியாவின் ஒற்றுமைக்கும், இறையாண்மைக்கும் ஆபத்து விளைவிக்கும் வகையில் ரகசிய தகவல்களை போராட்டக் குழுவினர் கேட்டு வருகின்றனர். இதற்கு உரிய பதில்களை தெரிவிக்க முடியாது.

இப்பிரச்சனை தொடர்பாக நிபுணர் குழு அமைக்கப்படும் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். இது வருந்தத்தக்கது என்றார்.

English summary
Thangabalu, former president of TN congress committe has accused the Kudankulam protesters of asking questions that will affect the unity and sovereignity of the nation.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X