For Daily Alerts
Just In
சோனியா கண்ணீர் விட்டதாக குர்ஷித் சொன்னது பொய்!: திக்விஜய்சிங்

குர்ஷித் பேச்சு
உத்தரப்பிரதேசத்தில் தேர்தல் பிரச்சாரத்தின் போது சல்மான் குர்ஷித் பேசுகையில், "டெல்லி ஜாமியா நகரில் 2008-ம் ஆண்டு செப்டம்பர் 19-ம் தேதி நடைபெற்றது. இந்த என்கவுன்ட்டரில் உத்தரப்பிரதேசத்தின் ஆஸம்கரில் இருந்து வந்த 2 முஸ்லீம்கள் கொல்லப்பட்டனர்.
இந்த என்கவுன்ட்டர் குறித்த படங்களைப் பார்த்ததும் சோனியாவின் கண்களில் இருந்து கண்ணீர் வந்தது.
இதுகுறித்து முழுமையாக விசாரணை நடத்துமாறு அவர் உத்தரவிட்டார்," என்றார்.
திக்விஜய் மறுப்பு
சல்மான் குர்ஷித்தின் இந்த கருத்தை காங்கிரஸ் பொதுச்செயலாளர் திக்விஜய்சிங் நிராகரித்துள்ளார்.
"சோனியா காந்தி அழவில்லை. அது சல்மான் குர்ஷித்தின் சொந்த கருத்து" என்றார்.
திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!