பி.டி. கத்தரிக்காய் தடைக்கு என் ஜி ஓக்கள் காரணம் இல்லை : ஜெய்ராம் ரமேஷ்
Subscribe to Oneindia Tamil

இது தொடர்பாக கொச்சியில் ஜெய்ராம் ரமேஷ் கூறியதாவது:
நான் சுற்றுச்சூழல் துறை அமைச்சராக இருந்தபோது, மரபணு மாற்றப்பட்ட கத்தரிக்காய்களை சாகுபடி செய்ய அனுமதிப்பது தொடர்பாக விஞ்ஞானிகள், விவசாயப் பிரதிநிதிகள், சமூக நல அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் உள்ளிட்ட 8,000 பேரிடம் 7 மாதங்களாக ஆலோசனை நடத்தினேன்.
மேலும், விஞ்ஞானிகளுக்கும், அனைத்து மாநில முதல்வர்களுக்கும் கடிதம் எழுதினேன்.
முதல்வர்கள் அனைவரும் பி.டி. கத்தரிக்காயை கொண்டு வருவதற்கு எதிர்ப்புத் தெரிவித்தனர். விஞ்ஞானிகளிடையேயும் ஒருமித்த கருத்து ஏற்படவில்லை. இதையடுத்தே பிடி கத்தரிக்காய்க்கு அனுமதி அளிப்பதை ஒத்திவைத்தேன்.
இந்த விஷயத்தில் வெளிநாட்டு தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் எதுவும் நெருக்குதல் தரவில்லை. என்றார் அவர்.












Click it and Unblock the Notifications