For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

என்கவுன்ட்டர்-சிபிஐ விசாரணை கோரும் வழக்கில் தமிழக அரசுக்கு ஹைகோர்ட் நோட்டீஸ்

By Mathi
Google Oneindia Tamil News

Chennai Encounter
சென்னை: சென்னை வேளச்சேரியில் 5 பேர் போலீசார் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் குறித்து உரிய பதிலளிக்குமாறு தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

சென்னை என்கவுன்ட்டர் தொடர்பாக சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும் என்று கோரி வழக்கறிஞர் புகழேந்தி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

புகழேந்தி மனு

புகழேந்தி தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்தாவது:

வங்கிக் கொள்ளை வழக்கை விசாரிக்க போலீஸ் விரும்பாமல் சந்தேக நபர்களை சுட்டுக் கொல்ல வேண்டும் என்ற நோக்கத்துடனேயே செயல்பட்டிருக்கின்றனர்.

மேலும் சம்பவ இடத்தில் காவல்துறையினருடன் மோதல் நடந்ததற்கான எந்த வித தடயமும் இல்லை.

இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி. விசாரிக்கக் கூடாது. சம்பந்தப்பட்ட போலீசார் மீது கொலைக் குற்றம் வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.

இம்மனு நீதிபதிகள் எலிபி தர்மா ராவ், என். கிருபாகரன் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.

மனுவை விசாரித்த நீதிபதிகள் இச்சம்பவம் தொடர்பாக வரும் செவ்வாய்க்கிழமைக்குள் பதிலளிக்குமாறு தமிழக அரசுக்கும் காவ்லதுறை தலைவர் மற்றும் சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரிகளுக்கும் உத்தரவிட்டனர்.

வழக்கின் அடுத்த கட்ட விசாரணை மார்ச் 6-ந் தேதி நடைபெறும் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

English summary
The Madras High Court on Tuesday ordered notice to the Tamil Nadu government on a writ petition seeking registration of a case of murder against the police personnel involved in the “killing” of five persons, suspected to be bank robbers, in an alleged encounter at Velachery in Chennai last week and transfer of the case to the Central Bureau of Investigation.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X