உங்களுக்கெல்லாம் இது புதுசா இருக்கலாம்.. எனக்கு பழகிடுச்சி.. அருண் ராஜிடம் கூலாக சொன்ன விஜய்
சென்னை: விஜய் ஆட்சி அமைக்கும் முன்பே பல்வேறு நெருக்கடிகள் சூழ்ந்துள்ள நிலையில், "உங்களுக்குலாம் இது புதுசா இருக்கலாம்.. எனக்கு பழகிடுச்சி.. என விஜய் தன்னிடம் கூறியதாக அருண் ராஜ் கூறியுள்ளார்.
தமிழக சட்டசபை தேர்தலில் திமுக, அதிமுக ஆகிய 2 கட்சிகளையும் பின்னுக்குத் தள்ளி விஜய்யின் த.வெ.க. 108 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. 2 திராவிட கட்சிகளையும் வீழ்த்தி வெற்றி பெற்றுள்ள விஜய் எப்போது ஆட்சி அமைக்கப் போகிறார்? என்ற எதிர்பார்ப்பு தவெகவினர் மத்தியில் நிலவி வருகிறது.

விஜய்க்கு நெருக்கடி
விஜய் முதல்வர் நாற்காலியில் அமர்ந்து அவர் என்னென்ன உத்தரவுகளை பிறப்பிக்க போகிறார்? முதல் கையெழுத்தை போட்டு விஜய் எந்த தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற போகிறார்? என்பது போன்ற பல கேள்விகள் பொதுமக்கள் மத்தியிலும், தவெக தொண்டர்கள், நிர்வாகிகள் மத்தியில் பலமாக எழுந்துள்ளது. ஆனால் விஜய் ஆட்சி பொறுப்பேற்பதில் தொடர்ந்து சிக்கல் எழுந்து வருகிறது.
தவெக 108 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றதாலும், காங்கிரசுடன் கூட்டணி வைத்ததன் மூலம் 112 ஆக மட்டுமே பலம் உள்ளது. ஆட்சி அமைக்க இன்னும் 6 எம்.எல்.ஏக்களின் ஆதரவு வேண்டும் என்பதால் தவெகவினர் விசிக மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளுடன் நேரடியாக சென்று தவெக நிர்வாகிகள் ஆதரவு கேட்க தொடங்கியுள்ளனர். இன்னொருபுறம் அதிமுக - திமுக கூட்டணி அமைக்க போவதாகவும் தகவல்கள் பரவி வருகின்றன.
அருண்ராஜ் பேட்டி
இது ஒரு புறம் தவெகவினருக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ள நிலையில், விஜய்க்கு வழங்கப்பட்ட கான்வாய் பாதுகாப்பு வாகனங்கள் வாபஸ் பெறப்பட்டது, பதவியேற்க ஆளுநர் அழைக்காதது என பதவியேற்பதற்கு முன்பே நெருக்கடிகள் விஜய்யை சூழ்ந்துள்ளன. இந்த நிலையில், "உங்களுக்குலாம் இது புதுசா இருக்கலாம்.. எனக்கு பழகிடுச்சி.. என விஜய் தன்னிடம் கூறியதாக அருண் ராஜ் கூறியுள்ளார். அவர் கூறியதாவது:-
எனக்கு இது பழகிடுச்சி என சொன்னார்
இப்போது மட்டுமல்ல.. எப்போதுமே தமிழக வெற்றிக் கழகம் மீதும், தவெக தலைவர் விஜய் மீதும் பல்வேறு திட்டமிட்ட சதிகள் நடந்தது என்பது ஊருக்கே தெரியும். அதையும் மீறி தான் நாங்கள், தவெக ஆட்சிக்கு வந்து இருக்கிறது. எனவே எல்லாத்தையும் பொறுமையா பாருங்கள். எல்லாம் நல்லதே நடக்கும்.. நீதி வெல்லும்.
எங்க தலைவர் கூட நேற்று என்னிடம் சொன்னார்.. உங்களுக்குலாம் இது புதுசா இருக்கலாம்.. எனக்கு இது பழகிடுச்சி.. என விஜய் தன்னிடம் பேசினார். பாத்துக்கலாம் என சொன்னார். இதை டிலே தான் பண்ண முடியும். ஒரு சட்டப்பூர்வமான ஒரு விஷயத்தை கொஞ்ச நாள் தள்ளித்தான் போட முடியுமே தவிர வேறு ஒன்னும் செய்ய முடியாது.. நீதி கண்டிப்பா வெல்லும்" என்று கூறினார்.
-
உடனே வாங்க.. அதிகாரிகளை மீட்டிங் ரூமிற்கு அழைத்த விஜய்.. துளைச்சு எடுத்துட்டாரே.. வாத்தி ரெய்டு! -
நிலத்தை உடனே கைப்பற்ற வேண்டும்.. விஜய் வெளியிட்ட புது உத்தரவு.. 15 திட்டங்கள் 'Waiting'! -
ஃப்ரண்ட்ஸ் இப்போ என்னாச்சுன்னா.. போலீஸ் ஸ்டேஷனையும் விடாத தவெகவினர்.. ரீல்ஸ் அலப்பறையால் அலறும் காவலர்கள் -
“என் மகனுக்கு TVK என பெயர் வைக்கப் போகிறேன்” - தவெக எம்.எல்.ஏ பல்லவி அறிவிப்பு -
டிகே.சிவகுமார் என்ட்ரி.. விஜய் கொடுத்த பலம்.. அசைக்க முடியாத CBN.. வரலாற்று சம்பவம் மக்களே! -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
உங்க வயசு என் அனுபவம்.. சீனியருக்கு மரியாதையில்லை! ஆனந்த் - ஆதவ் - அருணுக்கு அடுத்து செங்கோட்டையன்! -
அமைச்சர் ராஜ்மோகனுக்காக.. அகற்றப்பட்ட கலைஞர் படம்.. கடும் எதிர்ப்பால் மீண்டும் வைக்கப்பட்டது! -
“முஸ்லீம் மக்களை காப்பாற்றும் லட்சணம் இதுதானா?" TVK + IUML கட்சிகளை லெஃப்ட் ரைட் வாங்கிய திமுக -
‘அல்காரிதம்’ புரியாததால் வந்த வினை! தவெகவின் அலையைக் கணிக்கத் தவறிய டிஆர்பி ராஜா.. அடியோடு மாறுதாம்! -
அன்னதானம் எங்க போடறீங்க.. வாட்டர் ஸ்பாட் எங்க.. அதிகாரிகளை கேள்விகளால் துளைத்த ரமேஷ் -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்!












Click it and Unblock the Notifications