For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

இலங்கைக்கு எதிராக தீர்மானம்-ஜெனீவாவில் திரண்ட தமிழர்கள்-ஆர்ப்பாட்டம்

Google Oneindia Tamil News

Agitation of Tamils in Geneva
ஜெனீவா: ஐ.நா. மனித உரிமைகள் மாநாட்டில் இலங்கையின் போர்குற்றங்களுக்கு எதிரான தீர்மானம் கொண்டு வரப்படவுள்ளதைத் தொடர்ந்து ஜெனீவாவை நோக்கி ஐரோப்பிய நாடுகள் பலவற்றிலிருந்து தமிழர்கள் பெருமளவில் திரண்டு வந்தவண்ணம் உள்ளனர். இவர்கள் நேற்று ஐ.நா. மனித உரிமைகள் அவை முன்பு கூடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மனித உரிமைகள் மாநாட்டின் முதல் நாளிலேயே நூற்றுக்கணக்கில் தமிழர்கள் திரண்டுள்ளதால் இலங்கை அரசின் பீதி அதிகரித்துள்ளது.

முள்ளிவாய்க்கால் சம்பவத்தில் இலங்கைக்கு எதிராக சர்வதேச அளவில் அழுத்தங்கள் அதிகரித்து வருகின்றன. இந்த சூழ்நிலையில்தான் மனித உரிமைகள் மாநாட்டில் இலங்கைக்கு எதிரான தீர்மானம் என்ற நல்ல செய்தி உலகத் தமிழர்களுக்கு வந்து சேர்ந்துள்ளது.

இதனால் இலங்கைக்கு எதிரான உலகளாவிய நெருக்கடியை அதிகரிக்கும் வகையில் ஜெனீவாவில் தமிழர்கள் குவிந்துள்ளனர். சுவிட்சர்லாந்து, கனடா உள்ளிட்ட பல்வேறு நாடுகளிலிருந்தும் இவர்கள் வந்துள்ளனர். தொடர்ந்தும் வந்தவண்ணம் உள்ளனர்.

நேற்று தொடங்கிய ஐ.நா. மனித உரிமைகள் மாநாட்டின்போது இவர்கள் மாநாட்டு அரங்குக்கு அருகே கூடி பெருந்திரள் ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தினர்.

English summary
Eelam Tamils from all over Europe are thronging Geneva to pressure the member countries of UNHRC to support the resolution against genocidal Sri Lankan govt.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X