பபுவா நியூகினியாவில் 6.7 ரிக்டரில் பயங்கர நிலநடுக்கம்: மக்கள் பீதி
கொரோகா: பபுவா நியூகினியாவில் இன்று காலை 8.15 மணிக்கு பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 6.7 ரிக்டராக பதிவாகியுள்ளது.
இந்தோனேசியா அருகே உள்ள பபுவா நியூகினியாவில் இன்று காலை 8.15 மணிக்கு பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 6.7க பதிவாகியுள்ளது. தலைநகர் கொரோகாவில் இருந்து 64 கிமீ தொலைவில் உள்ள இடத்தில் இது உணரப்பட்டது. மேலும் போர்ட் மோர்ஸ்பியிலும் அதிர்வுகள் உணரப்பட்டது.
பூமிக்கு அடியில் சுமார் 100 கிமீ ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதால் பாதிப்பு பெரிதாக இருக்காது என்று வானிலை ஆய்வு மைய அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இந்த நிலநடுக்கத்தால் வீடுகள் அதிர்ந்தன. இதனால் மக்கள் அலறியடித்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியே ஓடி வந்தனர்.
இந்த நிலநடுக்கத்தால் உயிர் சேதமோ, பொருட் சேதமோ ஏற்பட்டதாக தகவல்கள் இல்லை. அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படும் இடத்தில் பபுவா நியூகினியா அமைந்துள்ளது. கடந்த வாரம் கூட அந்நாட்டில் உள்ள நியூ பிரிட்டன் பகுதியில் 6.4 அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. அதனால் எந்தவித சேதமும் ஏற்படவில்லை.
கடந்த 1998ம் ஆண்டு பபுவா நியூகினியாவின் வடகிழக்கு பகுதியான அய்டேப் என்ற இடத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் 2,000 பேருக்கும் அதிகமானோர் உயிர் இழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications