For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஐநாவில் விவாதம்- 'மீண்டும் புலிகள் எழுந்துவிடுவார்கள்'- சொல்கிறது இலங்கை

By Shankar
Google Oneindia Tamil News

UNHRC
ஜெனீவா: அமெரிக்க தீர்மானம் வெற்றி பெற்றால் இலங்கையில் மீண்டும் விடுதலைப் புலிகள் எழுச்சி பெறுவார்கள். எனவே இதை ஆதரிக்கக் கூடாது, என இலங்கை வாதிட்டது.

இலங்கையின் போர்க்குற்றங்களுக்கு எதிராக ஐநா மனித உரிமை கவுன்சிலில் அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானத்தின் மீது இன்று வாக்கெடுப்பு நடந்தது.

அதற்கு முன்னதான பொது விவாதம் இன்று ஐநா மனித உரிமை கவுன்சில் கூட்டத்தில் இன்று தொடங்கியது. 46 நாடுகளின் பிரதிநிதிகள் இந்த விவாதத்தில் பங்கேற்றுப் பேசினார்கள்.

ஒவ்வொரு நாட்டின் பிரதிநிதிக்கும் தலா 3 நிமிடங்கள் இந்த விவாதத்தின் போது ஒதுக்கப்பட்டுள்ளது.

விவாதம் ஆரம்பித்த உடன், தங்கள் தரப்பு விளக்கத்தை இலங்கை அளித்தது.

இந்த தீர்மானத்துக்கு அவசியமில்லை என்றும், இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டால், மீண்டும் இலங்கையில் புலிகள் எழுச்சி பெறுவார்கள் என்றும் இலங்கை கூறியுள்ளது.

மேலும் கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை தீவிரமாக அமல்படுத்த இருப்பதாகவும், அதற்கு ஆதரவும் அவகாசமும் தேவை என்றும் இலங்கை கோரியது.

இலங்கையின் விளக்கத்துக்குப் பிறகு உறுப்பு நாடுகளின் விவாதம் தொடங்கியது. ஒவ்வொரு நாடும் தாம் ஏன் இந்த தீர்மானத்தை ஆதரிக்கிறோம் அல்லது எதிர்க்கிறோம் என்பதற்கான காரணங்களை சுருக்கமாகக் கூறினர்.

இலங்கைப் பிரச்சினை குறித்து பெரிதாகத் தெரியாத 8 நாடுகள் நடுநிலை வகிப்பதாகக் கூறிவிட்டன.

English summary
The Sri Lankan Govt told whether the US resolution passed, the LTTE would be emerged again in the country. Sri Lanka also requested the UNHRC countries to back her in this issue.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X