டெல்லி முதல்வர் ஷீலா தீட்சித் மீது நடவடிக்கை எடுக்க லோக் ஆயுக்தா மீண்டும் பரிந்துரை

புகார் என்ன?
டெல்லி முதல்வர் ஷீலா தீட்சித் கடந்த 2008-ம் ஆண்டு நடைபெற்ற பேரவைத் தேர்தலை கருத்தில் கொண்டு, ஏழைகளுக்கு குறைந்த விலையில் அடுக்கு மாடி வீடுகள் கட்டித்தரப்படும் என்று வாக்குறுதி அளித்தார். மேலும், குறைந்த விலையிலான 60,000 ஆயிரம் வீடுகள் கட்டி முடிக்கப்பட்டு விட்டதாகவும், பயனாளிகளுக்கு ஒதுக்கீடு செய்ய தயாராக இருப்பதாகவும் தேர்தல் முடிந்ததும் ஒப்படைக்கப்படும் என்றும் கூறினார்..
ஆனால் தேர்தல் முடிந்து, ஷீலா தீட்சித் மீண்டும் முதல்வரான பிறகும், உரியவர்களுக்கு வீடுகள் ஒதுக்கப்படவில்லை. இதுபற்றி சிலர் விசாரணையில் இறங்கிய போது, ஷீலா தீட்சித் சொன்னது போல, வீடுகள் எதுவும் கட்டப்படவில்லை. உண்மையை மறைத்து பொய்யான தகவலை தெரிவித்துள்ளார் என்பது தெயவந்தது.
ஊழல்
மேலும், அடுக்குமாடி வீடுகள் கட்டும் திட்டத்தில் ஊழல்கள் நடந்திருப்பதும் வெளிச்சத்துக்கு வந்தது. இதையடுத்து, சிலர் லோக் ஆயுக்தாவில் புகார் அளித்தனர். அதன் மீது நடவடிக்கை எடுத்த லோக் ஆயுக்தா நீதிபதி மன்மோகன் சரீன், டெல்லி முதல்வர் ஷீலா தீட்சித், குறைந்த விலை அடுக்குமாடி வீடுகள் கட்டப்படுவதற்கு முன்பே, 60 ஆயிரம் வீடுகள் கட்டி முடிக்கப்பட்டு ஒதுக்கீடு
செய்யும் நிலையில் இருப்பதாக உண்மைக்கு புறம்பான தகவலை வெளியிட்டுள்ளார்.
இந்த திட்டத்தில் ஊழலும் நடந்திருப்பது தெரிகிறது. எனவே, அவருக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீலுக்கு பரிந்துரை செய்தார். ஆனால் நீதிபதி அனுப்பிய பரிந்துரை அறிக்கையை குடியரசுத் தலைவர் நிராகரித்தார். அதுமட்டு மின்றி, டெல்லி அரசின் சம்பந்தப்பட்ட துறையிடம், இது போன்ற விஷயங்களில் மிகவும் கவனமாக நடந்து
கொள்ளுங்கள் என்று அறிவுரை மட்டும் கூறிவிட்டு, நடவடிக்கை எடுக்காமல் விட்டு விட்டார்.
மீண்டும் பரிந்துரை
இந்நிலையில் ஷீலா தீட்சித் விவகாரத்தில் குடியரசுத் தலைவர் தன்னுடைய முந்தைய நிலையை மறு பரிசீலனை செய்ய வேண்டும் எனக் கோரி, லோக் ஆயுக்தா மீண்டும் கடிதம் அனுப்பி உள்ளது. மறு ஆய்வு கோரும் சிறப்பு அறிக்கையை டெல்லி ஆளுநர் தேஜிந்தர் கன்னா மூலம் குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைத்துள்ளது.
-
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு? -
விஜய்யின் கனவு திட்டம்.. கூவம், அடையாறு ஆறுகளை மாற்றப்போகும் மாஸ்டர்பிளான்.. கைகோர்க்கும் டெல்லி












Click it and Unblock the Notifications