2 இத்தாலியர்களை விடுவிப்பதில் சிக்கல்- அரசுடனான பேச்சுவார்த்தையை நிறுத்தினர் தூதர்கள்
புவனேஸ்வர்: ஒரிசாவின் லஷ்மிபூர் எம்.எல்.ஏ. கடத்தப்பட்ட நிலையில் ஏற்கனவே கடத்தப்பட 2 இத்தாலியர்களை மீட்பது தொடர்பாக அரசுடன் தாங்கள் நடத்திய வந்த பேச்சுவார்த்தையை தற்காலிகமாக நிறுத்துவதாக மாவோயிஸ்டுகளின் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.
மாவோயிஸ்டுகள் சார்பாக ஒரிசா மாநில அரசுடன் பேச்சுவார்த்தை நடத்திய தண்டபாணி மொகந்தி மற்றும் சர்மா ஆகியோர் புவனேஸ்வரில் செய்தியாளர்களிடம் இதனைத் தெரிவித்தனர்.
மாவோயிஸ்டுகள் மற்றும் அரசு தரப்பினரும் தொடர்ந்தும் வன்முறை சம்பவங்களில் ஈடுபட்டு வருவதாகவும் அவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். மனிதாபிமான அடிப்படையில் லஷ்மிபூர் தொகுதி எம்.எல்.ஏ.வை மாவோயிஸ்டுகள் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
கஞ்சம்-கந்தமால் மாவட்ட எல்லையில் கடந்த மார்ச் 14-ந் தேதியன்று 2 இத்தாலியர்களை மாவோயிஸ்டுகள் கடத்திச் சென்றனர்.
இவர்களை விடுவிப்பது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த மனித உரிமை ஆர்வலர்களான சர்மாவையும் மொகந்தியையும் மாவோயிஸ்டுகள் நியமித்திருந்தனர். மாவோயிஸ்டு தூதர்களுடன் கடந்த 2 நாட்களாக ஒரிசா அரசும் பேச்சுவார்த்தை நடத்திவந்தது. மாவோயிஸ்டுகள் முன்வைத்துள்ள 13 அம்ச கோரிக்கைகள் இது இப்பேச்சுவார்த்தைகளில் விவாதிக்கப்பட்ட நிலையில் எம்.எல்.ஏ. கடத்தப்பட்டார்.
இதையடுத்து இன்று நடைபெற இருந்த 3-வது சுற்று பேச்சுவார்த்தை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
-
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு? -
விஜய்யின் கனவு திட்டம்.. கூவம், அடையாறு ஆறுகளை மாற்றப்போகும் மாஸ்டர்பிளான்.. கைகோர்க்கும் டெல்லி












Click it and Unblock the Notifications