யூனிநாரிலிருந்து வெளியேற ரூ15 கோடி டாலர்- யூனிடெக் திடீர் நிபந்தனை

யூனிநார்
நார்வேயின் டெலிநார் மற்றும் இந்தியாவின் யூனிடெக் ஆகிய நிறுவனங்களின் கூட்டுத் திட்டம் யூனிநார் ஆகும். இந்த கூட்டு நிறுவனம் ஜி.எஸ்.எம். தொழில்நுட்பத்தில் செல்போன் சேவை வழங்கி வருகிறது. ரியல் எஸ்டேட் துறையைச் சேர்ந்த யூனிடெக், இந்த கூட்டுத் திட்டத்தில் 32.7 விழுக்காடு பங்கு மூலதனத்தைக் கொண்டுள்ளது. நார்வே நிறுவனம் 67.25 விழுக்காடு பங்குகளைப் பெற்றுள்ளது. இந்நிறுவனம், கடந்த 2009-ஆம் ஆண்டில் இந்த பங்குகளை வாங்கியது.
பிரச்சனை என்ன?
யூனிநார் நிறுவனம் தற்போது சுமார் 4 கோடி வாடிக்கையாளர்களை கொண்டுள்ளது. உச்சநீதிமன்றம் பிப்ரவரி 2-ந் தேதி அன்று, 2008-ஆம் ஆண்டில் வழங்கப்பட்ட 122 செல்போன் சேவை உரிமங்களை ரத்து செய்து ஆணை வெளியிட்டது. இதனால் கடுமையாக பாதிக்கப்பட்ட நிறுவனங்களுள் யூனிநாரும் ஒன்றாகும். இதனையடுத்து டெலிநாருக்கும், யூனிடெக்கிற்கும் கருத்து வேறுபாடுகள் தோன்றின. யூனிநார் நிறுவனத்தின் விரிவாக்கப் பணிகளுக்கு தேவையான நிதி திரட்டுவதில் சிக்கல்கள் ஏற்பட்டன. இதன் தொடர்ச்சியாக டெலிநார் நிறுவனம் யூனிநார் நிறுவனத்திலிருந்து வெளியேற தயாரானது. இதுவரை ஏற்பட்ட பாதிப்புகளுக்காக இழப்பீடு கோரி யூனிடெக் நிறுவனத்திற்கு நோட்டீசும் அனுப்பியது. மேலும் முற்றிலும் புதிய நிறுவனம் ஒன்றை தொடங்கி, தற்போதைய வாடிக்கையாளர்கள், நிறுவனப் பணியாளர்களுடன் அதற்கு இடம் பெயரப் போவதாகவும் அறிவித்தது.
யூனிடெக் நிலை
தொடர்ந்து டெலிநார் தனது 67.25 விழுக்காடு பங்குகளை யூனிடெக்கிற்கு விற்று விட்டு வெளியேறுவதா அல்லது யூனிடெக் தனது 32.7 விழுக்காடு பங்குகளை டெலிநாருக்கு விற்பனை செய்து விட்டு விலகுவதா என்ற சர்ச்சை தோன்றியது. நார்வே நிறுவனத்தின் பங்கு மூலதனத்தை பெற விரும்பினால் அது குறித்து மார்ச் 19-க்குள் முடிவு செய்யுமாறு யூனிடெக்கிற்கு கம்பெனிகள் சட்ட வாரியம் அறிவுறுத்தியது. இந்நிலையில் யூனிடெக் நிறுவனம் தற்போது தனது பங்கு மூலதனத்தை டெலிநாரிடம் கொடுத்து விட்டு வெளியேற விரும்புவதாக கம்பெனிகள் சட்ட வாரியத்திடம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. யூனிடெக் நிறுவனம், தனது 32.7 விழுக்காடு 15 கோடி டாலர் கோரியுள்ளது.
-
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு? -
விஜய்யின் கனவு திட்டம்.. கூவம், அடையாறு ஆறுகளை மாற்றப்போகும் மாஸ்டர்பிளான்.. கைகோர்க்கும் டெல்லி












Click it and Unblock the Notifications