யார் என்ன சொன்னாலும் கேட்க மாட்டோம்! - ராஜபக்சே திமிர்ப் பேச்சு

ஜெனீவா மனித உரிமை கூட்டத் தொடரில், இலங்கை தோற்றுப் போனதற்கு விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள் மகிழ்ச்சியடைவதாக அவர் குறிப்பிட்டார்.
களுத்துறை மாவட்டத்தில் உள்ள பண்டாரகமவில் நேற்று இடம்பெற்ற நிகழ்ச்சியொன்றில் பங்கேற்று அவர் பேசியதாவது:
பயங்கரவாத நடவடிக்கைகளை முடிவிற்குக் கொண்டு வந்த நிலையில், நிரந்தரமான சமாதான சூழ்நிலையை எதிர்காலத்தில் கொண்டு செல்வதற்கு அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
முப்பதாண்டு காலமாக இந்த நாட்டைச் சீரழித்த பயங்கரவாதத்தை முற்றாக ஒழித்து நாட்டில் அமைதியை ஏற்படுத்தி அபிவிருத்தியில் நாட்டைக் கட்டியெழுப்பி வரும் வேளையில் நாட்டுக்கு எதிரான அந்நிய நெருக்கடிகளை எதிர்கொள்ள நேர்ந்துள்ளது.
2005 ஆம் ஆண்டு நாம் இந்த நாட்டின் பொறுப்பேற்றபோது நாட்டு மக்கள் அபிவிருத்தியையோ வேறு எதையும் எம்மிடம் எதிர்பார்க்கவில்லை. பயங்கரவாதத்தை ஒழித்து நாட்டைச் சுதந்திரமாக்குமாறுதான் கேட்டனர். அதை நாம் முழுமையாக நிறைவேற்றியுள்ளோம்.
பயங்கரவாதத்திற்குக் கப்பம் வழங்காமல் வெற்றி கொள்ளப்பட்ட யுத்தம் என்பதால் மக்கள் இன்று சுதந்திரமாகவும் கெளரவமாகவும் வாழக்கூடிய சூழல் உருவாகியுள்ளது. இதனூடாக சகல மக்களும் தமது பொருளாதாரத்தையும் வாழ்வாதாரத்தையும் மேம்படுத்திக் கொள்வதற்குச் சந்தர்ப்பம் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளது.
இலங்கையராகிய எம்மை எவரும் அடிமைப்படுத்த முடியாத கெளரவம் மக்களுக்கு பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளது. சகல மதங்களும் இனங்களும் அவர்களின் வழிபாடுகள், கலாசார பண்பாடுகளை சுதந்திரமாக அனுபவிக்கும் நிலையைத் தோற்றுவிக்க முடிந்துள்ளது.
2009 மே 18 ஆம் திகதியில் நாம் நாட்டிலிருந்து பயங்கரவாதத்தை அழித்த சமயத்தில் நாடு அபிவிருத்தியின்றி, பயனின்றி இருந்ததால் பெற்றோர், பிள்ளைகளை வெளிநாடுகளுக்கு அனுப்ப தயாராகினர்.
இப்போது நாடு அபிவிருத்தியில் கட்டியெழுப்பப்பட்டு வருகிறது- வெளி நாடுகளிலுள்ளோரும் இங்கு வந்து தொழில் செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது. மக்களுக்கு நிவாரணங்களும் சலுகைகளும் வழங்கப்பட்டுள்ளன.
இத்தருணத்தில் சில சக்திகள் அவதூறுகளைக் கிளப்பி வருகின்றன. கடந்த காலங்களில் அதிகாரத்திலிருந்து எம்மைக் கடனாளியாக்கியோரே இதைச் செய்கின்றனர்.
இவ்வளவு காலம் வடக்கிற்குப் போகாதவர்கள் ஜெனீவாவில் அமெரிக்கா தீர்மானத்தை முன்வைத்த பின்னர் வடக்கிற்குச் சென்று அங்குள்ள மக்கள் மத்தியில் விசமத்தனமாகப் பேசுகின்றனர். வடக்கில் அரசாங்கம் எந்த அபிவிருத்தியையும் மேற்கொள்ளவில்லை என அங்கிருந்து குரல் எழுப்புகின்றனர்.
சர்வதேச தமிழர் அமைப்புக்கள், புலி ஆதரவாளர்கள் அமெரிக்காவிக்கு ஆதரவாக வாக்களித்த நாடுகளுக்காகவே குறுகிய நோக்குடன் இவர்கள் செயற்பட்டனர். எரிபொருள் விலை, சமையல் எரிவாயு விலை, இவை உலக சந்தைகளில் விலை உயரும் போது இங்கும் அதிகரிக்கின்றது. இவற்றை எம்மால் கட்டுப்படுத்த முடியாது.
அதனால்தான் நாம் இங்கு எரிபொருள் எடுக்கும் பணியை ஆரம்பித்துள்ளோம். எரிவாயு பெற முடியுமா என்ற ஆய்வினை மேற்கொண்டுள்ளோம். இவற்றை எமக்கல்ல எதிர்கால சந்ததியின் சுபிட்சம் கருதியே மேற்கொள்கின்றோம்.
இதற்கெதிராகவும் சதி முயற்சிகள் நடக்கின்றன. சில சக்திகள் மக்களைத் தூண்டி விட்டு போராட்டம் நடத்தப் பார்க்கின்றன.
ஜெனீவாவில் நாம் 15 வாக்குகள் பெற்றோம். மேலும் எட்டு நாடுகள் எமது வேலைத் திட்டங்களை ஏற்றுக்கொண்டுள்ளன. அந்நாடுகள் பெரும் அழுத்தங்கள் காரணமாகவே வாக்களிக்காமல் விட்டன.
எமக்கு வாக்களிக்காத நாடுகளுக்கு நான் ஒன்றை ஞாபகப்படுத்துகின்றேன். பயங்கரவாதிகள் அந்த நாடுகளில் கொடிகளை உயர்த்திக் கொண்டு செய்யப் போகும் பாதிப்புகளை அவர்களும் அனுபவிக்க நேரும் என்பதை மறந்துவிடக் கூடாது. இது அவர்களுக்குப் பின்னர் புரியும்.
இப்போது புலி ஆதரவாளர்களும் புலம்பெயர் தமிழர் அமைப்புகளுமே எமது தோல்வியில் மகிழ்ச்சி காண்கின்றனர் என்பதை மக்கள் உணர வேண்டும்.
இது சுயமான ஆட்சி நடக்கும் நாடு. யார் சொன்னாலும் கேட்க வேண்டிய அவசியமில்லை. இங்கு அநாவசிய அழுத்தங்களை பிரயோகிக்க எவருக்கும் இடமளிக்க முடியாது.
-
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு? -
விஜய்யின் கனவு திட்டம்.. கூவம், அடையாறு ஆறுகளை மாற்றப்போகும் மாஸ்டர்பிளான்.. கைகோர்க்கும் டெல்லி












Click it and Unblock the Notifications