கூடங்குளம் போராட்டம் 6-வது நாளாக நீடிப்பு - ஏடிஜிபி ஜார்ஜ் இன்று மீண்டும் ஆய்வு
இடிந்தகரை: கூடங்குளம் அணு மின் நிலையத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து போராட்டக்காரர்கள் நடத்தி வரும் உண்ணாவிரதப் போராட்டம் 6வது நாளாக நீடிக்கிறது. போராட்டக் குழுவினரை பரிசோதித்த மருத்துவக் குழு, உடல்நிலை மிகவும் பாதிக்கப்பட்டால் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்க வேண்டி வரும் என்று தெரிவித்துள்ளனர்.
கூடங்குளம் போராட்டத்தில் பெருமளவிலான கிராமப் பெண்கள் பங்கேற்றுள்ளனர்.
இந்நிலையில் பாதுகாப்பு பணியை ஆய்வு செய்வதற்காக தமிழக ஏ.டி.ஜி.பி. ஜார்ஜ் இன்று கூடங்குளம் வந்தார்.
கூடங்குளம் போலீஸ் நிலையத்தில் வைத்து செய்தியாளர்களிடம் ஜார்ஜ் கூறியதாவது:
கூடங்குளம் அணு உலை போராட்டக்காரர்களுக்கு நாங்கள் எந்தவித இடையூறும் செய்யவில்லை. அவர்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் அனைத்தும் கொண்டு செல்ல அனுமதிக்கப்படுகிறது. போராட்டக்காரர்கள் யாரையும் மிரட்டவில்லை. வழக்கு உள்ளவர்களை மட்டும்தான் போலீசார் கைது செய்துள்ளனர்.
எங்கள் கடமை
கைதான 178 பேர் சாலை மறியல் செய்ததால் கைது செய்யப்பட்டுள்ளனர். இடிந்தகரையில் போராட்டக்காரர்கள் சில தடைகளை ஏற்படுத்தியுள்ளனர். அவற்றை அகற்றுமாறு கேட்டு கொண்டுள்ளோம். தற்போது கூடங்குளத்தில் சட்டம் ஒழுங்கு சீராக உள்ளது. முற்றிலும் சீரான பிறகு போலீஸ் பாதுகாப்பு திரும்பப் பெறப்படும். அணு மின் நிலைய பணியாளர்களுக்கு பாதுகாப்பு அளிப்பது எங்களது கடமை.
உதயகுமார் கைதா? ஜார்ஜ் மழுப்பல்
கூடங்குளத்தில் ஏதாவது பிரச்சினை ஏற்பட்டால் பொதுமக்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்கப்படும் என்பதற்காகத்தான் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது என்றார். அப்போது போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அணு உலை எதிர்ப்பு குழு ஒருங்கிணைப்பாளர் உதயகுமார் கைது செய்யப்படுவாரா? என்று கேள்வி எழுப்பப்பட்டது. அந்த கேள்விக்கு ஏ.டி.ஜி.பி. ஜார்ஜ் பதில் ஏதும் அளிக்காமல் அங்கிருந்து சென்றுவிட்டார்.
-
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு? -
விஜய்யின் கனவு திட்டம்.. கூவம், அடையாறு ஆறுகளை மாற்றப்போகும் மாஸ்டர்பிளான்.. கைகோர்க்கும் டெல்லி












Click it and Unblock the Notifications