போடியில் அரசு பொறியியல் கல்லூரி தொடங்க ஜெயலலிதா உத்தரவு !

இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
கிராமப் புறங்களில் வசிக்கும் மாணவ மாணவியர்கள் உயர் கல்விக்காக நகரங்களை நாடி வராமல் அவர்கள் வசிக்கும் இடங்களுக்கு அருகிலேயே கல்வி கற்பதற்கு ஏதுவாக தொழில் நுட்ப கல்லூரிகளை தமிழக அரசு தொடங்கி நடத்தி வருகிறது.
இதனை மேலும் விரிவுபடுத்தும் பொருட்டு, தேனி மாவட்டம் போடி நாயக்கனூரில் அரசு பொறியியல் கல்லூரி ஒன்றினை புதியதாக தொடங்க தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
இப்பொறியியல் கல்லூரி போடிநாயக்கனூர் வட்டம், மேல் சொக்கநாதபுரத்தில் 2012 - 13 கல்வி ஆண்டு முதல் செயல்படத் துவங்கும்.
இக் கல்லூரியில் முதலாம் ஆண்டில் அமைப்பியல் பிரிவில் 60 மாணவர்கள், இயந்திரவியல் பிரிவில் 60 மாணவர்கள், மின்னியல் மற்றும் மின்னணுவியல் பிரிவில் 60 மாணவர்கள், மின்னணுவியல் மற்றும் தொடர்பியல் பிரிவில் 60 மாணவர்கள், கணினி அறிவியல் பிரிவில் 60 மாணவர்கள் என 300 மாணவர்கள் அனுமதிக்கப்படுவார்கள்.
இக் கல்லூரிக்கு தேவையான கட்டடங்கள், தேவையான உபகரணங்கள், கணினிகள் வாங்குதல், அறைகலன்கள், ஆசிரியர் நியமனம், மாணவ மாணவியர் விடுதி, நூலகம், ஆய்வகக் கூடங்கள் அமைத்தல் போன்ற பல்வேறு பணிகளை நிறைவேற்ற 93 கோடியே 64 லட்சம் ரூபாய்க்கு நிர்வாக ஒப்புதல் வழங்கி முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
அரசின் இந்த நடவடிக்கை, தென் மாவட்டங்களில் உள்ள மாணவ மாணவியர் தொழில் நுட்பக் கல்வி பயில பேருதவியாக இருக்கும்.
-
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்?












Click it and Unblock the Notifications