'எலக்ஷன் வேலை நல்லா பாத்தீங்க!'- போலீசுக்கு பாராட்டு, ரூ.50 லட்சம் சிறப்பு படி
சங்கரன்கோவில்: சங்கரன்கோவில் இடைத்தேர்தலில் பணியாற்றிய நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த 2500 போலீசாருக்கு ரூ.50 லட்சம் தேர்தல் சிறப்பு படி வழங்க (அலவன்ஸ்) உத்தவிடப்பட்டுள்ளது.
சங்கரன்கோவில் இடைத்தேர்தல் கடந்த 18ம் தேதி நடைபெற்றது. இந்த தேர்தலுக்காக மார்ச் 17ம் தேதி முதல் 22ம் தேதி வரை 6 நாட்கள் 2500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். நெல்லை மாவட்டத்தில் உள்ள 66 காவல் நிலையங்கள், 4 புறக்காவல் நிலையங்களில் பணிபுரியும் இன்ஸ்பெக்டர், சப்-இன்ஸ்பெக்டர், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர், ஏட்டுகள் மற்றும போலீசார், பாளையங்கோட்டை ஆயுதப்படை போலீசார் என 2500 பேர் பணிபுரிந்தனர்.
சிறப்பு அலவன்ஸ்
சிறப்பு இன்ஸ்பெக்டர் முதல் இன்ஸ்பெக்டர்கள் வரை நாள் ஒன்றுக்கு ரூ.350 வீதம், 6 நாட்கள் வரை ரூ.2100ம், போலீசார் முதல் ஏட்டுகள் வரை நாள் ஒன்றுக்கு ரூ.275 வீதம் 6 நாட்களுக்கு ரூ.1650ம், தேர்தல் சிறப்பு படியாக மொத்தம் ரூ.50 லட்சம் வழங்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் உத்தரவிட்டுள்ளது. இந்த தேர்தல் சிறப்பு படியை அந்தந்த காவல் நிலையங்களில் பணிபுரிபவர்கள் அங்கேயே இன்று முதல் பெற்றுக் கொள்ளலாம் என்று எஸ்பி அலுவலக வட்டாரங்கள் தெரிவித்தன.
-
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு?












Click it and Unblock the Notifications