For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

நாட்டிலேயே முதல் முறையாக தமிழகத்தின் உணவுப் பாதுகாப்புக்கு ரூ. 4900 கோடி ஒதுக்கீடு

Google Oneindia Tamil News

Tamil Nadu Budget 2012
சென்னை: நாட்டின் எந்த மாநிலத்திலும் இல்லாத அளவுக்கு தமிழகத்தில் உணவுப் பாதுகாப்புக்கு ரூ. 4900 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படுவதாக நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் இன்று தாக்கல் செய்த பட்ஜெட்டில் கூறியிருப்பதாவது:

தேர்தல் அறிக்கையில் அளித்த வாக்குறுதியின்படி, 1.6.2011 முதல், 1.85 கோடி அரிசி அட்டைதாரர்கள் பயன்பெறும் வகையில், பொது விநியோகத் திட்டத்தின் மூலம் விலையில்லா அரிசி வழங்கும் திட்டத்தை முதல்- அமைச்சர் அறிவித்தார். நாட்டிலேயே அனைவருக்கும் முழுமையான உணவுப்பாதுகாப்பு அளிக்கும் இத்தகைய திட்டத்தைச் செயல்படுத்தியுள்ள ஒரே மாநிலம் தமிழகம் மட்டும்தான்.

துவரம் பருப்பு, உளுத்தம் பருப்பு, பாமாயில், செறிவூட்டப்பட்ட கோதுமை மாவு ஆகியவற்றையும் சலுகை விலையில் இந்த அரசு வழங்கி வருகிறது. 2012-2013 ஆம் ஆண்டில், உணவு மானியத்திற்காக 4,900 கோடி ரூபாயை இந்த அரசு ஒதுக்கீடு செய்துள்ளது.

இந்த அரசால் 50 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் ஏற்படுத்தப்பட்ட விலை கட்டுப்பாடு நிதியம் மூலம், இந்த ஆண்டில் மிளகாய்வற்றல், புளி ஆகியவற்றை வாங்கி அடக்க விலையிலேயே விற்பனை செய்து, வெளிச்சந்தையில் அவற்றின் விலையைக் கட்டுப்படுத்துவதற்காக பயன்படுத்தப்பட்டது என்று அவர் கூறியுள்ளார்.

English summary
Rs. 4900 hsa been allotted for Food safety in Tamil Nadu. This was announced by the finance minister O.Pannerselvam.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X