அதிமுக எம்எல்ஏக்கள் எதிர்கட்சி உறுப்பினர்கள் போல செயல்படக்கூடாது: ஜெ

சட்டமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரையொட்டி அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம், ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் நடந்தது. கூட்டம் குறித்து அதிமுக தலைமை நிலையம் வெளியிட்ட அறிக்கையில், ‘‘அதிமுக உறுப்பினர்கள் பட்ஜெட் கூட்டத்தொடரில் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பது குறித்து ஜெயலலிதா அறிவுரை வழங்கினார்’’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
கூட்டத்தில் ஜெயலலிதா பேசியது குறித்து சில எம்எல்ஏக்கள் கூறுகையில், சட்டசபையில் பெரும்பான்மை கட்சியாக இருக்கிறோம். எதிர்க் கட்சிகள் ஆத்திரமூட்டும் வகையில் பேசலாம். இதற்கு பதிலளிப்பதாக நாமும் ஆத்திரமடையக் கூடாது.
அதிமுக எம்.எல்.ஏக்கள், எதிர்கட்சி உறுப்பினர்கள் போல செயல்படக்கூடாது. எதிர்கட்சிகளின் குற்றச்சாட்டுகளுக்கு பொறுப்போடு நாம் பதில் சொல்ல வேண்டும். அநாகரிகமான முறையில் நடந்து கொள்ளக் கூடாது. ஒவ்வொரு பிரச்சனை குறித்தும் முன்பு நான் பதில் சொன்னேன். இனிமேல் அந்தந்த துறை அமைச்சர்கள் பதில் சொல்ல வேண்டும்.
பிரச்சனைகள் பற்றி பேசும் போதும், எதிர்க்கட்சியினருக்கு பதிலளிக்கும் போதும், எம்எல்ஏக்கள் அவர்களுடைய இடத்திலிருந்து வெளியேறி வரக் கூடாது.
அ.தி.மு.க எம்எல்ஏக்கள் மீது குற்றச்சாட்டுகள் எதுவும் வரக் கூடாது. அவையின் கண்ணியத்தை பாதுகாக்கும் வகையில் எம்எல்ஏக்கள் நடந்து கொள்ள வேண்டும் என முதல்வர் அறிவுறுத்தினார் என்றனர்.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
10 வருஷமா வேதனையில இருக்கேன்... எங்களை விஷம் வைத்து கொன்றுடுங்க... நடிகர் பாலா உருக்கம்!












Click it and Unblock the Notifications