கூடங்குளத்தில் கைதான போராட்டக்காரர்கள் 154 பேரில் 126 பேர் ஜாமீனில் விடுதலை

Subscribe to Oneindia Tamil

திருச்சி: கூடங்குளம் அணு உலைக்கு எதிராக முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டு கைதான 154 பேரில் 126 பேர் இன்று ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

கூடங்குளம் அணு உலைக்கு எதிராக அப்பகுதி மக்கள் நடத்தி வரும் போராட்டத்தால் அணு உலை பணிகள் 6 மாதங்களாக நிறுத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில் அணு உலையை உடனே திறக்குமாறு தமிழக முதல்வர் ஜெயலலிதா கடந்த 19ம் தேதி உத்தரவி்ட்டார். இதையடு்தது அன்றே அணு உலை திறக்கப்பட்டு சுமார் 300 பணியாளர்கள் பணிக்கு திரும்பினர்.

ஜெயலலிதாவின் உத்தரவை எதிர்த்து கூடங்குளம் அருகே உள்ள கூட்டப்புள்ளி கிராமத்தில் சிலர் முற்றுகை போராட்டம் நடத்தினர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட 154 பேரை போலீசார் கைது செய்து திருச்சி சிறையில் அடைத்தனர். கைதானவர்களில் 122 பேர் ஆண்கள், 42 பேர் பெண்கள். கடந்த 14 நாட்களாக சிறையில் இருந்த அவர்களை ஜாமீனில் விடுதலை செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதையடுத்து 122 ஆண்களில் 85 பேரும், 42 பெண்களில் 41 பேரும் இன்று ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டனர். 37 ஆண்கள், ஒரு பெண் மீது வழக்கு உள்ளதால் அவர்கள் விடுதலை செய்யப்படவில்லை. அவர்கள் மீதான வழக்கு வள்ளியூர் நீதி்மன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது. இதையடுத்து அந்த 38 பேரும் வேன் மூலம் வள்ளியூர் அழைத்துச் செல்லப்பட்டனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+