கூடங்குளம்: நக்சலைட் தொடர்பால் கைதானவருக்கு 18ம் தேதி வரை காவல் நீட்டிப்பு
வள்ளியூர்: நக்சலைட் தொடர்பு வழக்கில் கைது செய்யப்பட்ட கூடங்குளம் போராட்டக்குழுவைச் சேர்ந்த சதிஷ் குமார் மற்றும் அணு உலை எதிர்ப்பு போராட்டம் தொடர்பாக ஈரோட்டில் கைதான முகிலன் ஆகிய 2 பேரையும் வரும் 18ம் தேதி வரை திருச்சி சிறையில் அடைக்க வள்ளியூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கூடங்குளம் அணு மின் நிலையத்தில் உடனே பணிகளைத் துவங்க வேண்டும் என்று முதல்வர் ஜெயலலிதா கடந்த மாதம் 19ம் தேதி உத்தரவிட்டார். இதையடுத்து அன்றே அணு மின் நிலைம் திறக்கப்பட்டு ஊழியர்கள் பணிக்கு திரும்பினர். அங்கு பணிகள் தொடங்கியவுடன் அதைக் கண்டித்து கூட்டப்புளி கிராமத்தில் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இது தொடர்பாக பழவூர் போலீசார் 178 பேரை கைது செய்து திருச்சி மற்றும கடலூர் சிறைகளில் அடைத்தனர். இவர்களில் 30 பேருக்கு ஏற்கனவே கடந்த வாரம் நெல்லை நீதிமன்றத்தில் ஜாமீன் வழங்கப்பட்டது.
மீதமுள்ள 148 பேருக்கு நெல்லை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டது. அதில் பழவூர் காவல் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்று கூறப்பட்டது. அதன்படி திருச்சி, கடலூர் மற்றும் நாங்குநேரி இளையோர் சீர்திருத்த பள்ளியில் இருந்து விடுவிக்கப்பட்ட 40 பெண்கள் உள்பட 148 பேர் 2 பேருந்துகளில் நேற்று காலை 10 மணிக்கு பழவூர் காவல் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட்டனர்.
மேலும் நக்சலைட் தொடர்பு வழக்கில் கைது செய்யப்பட்ட சதிஷ் குமார் மற்றும் கூடங்குளம் போராட்டம் தொடர்பாக ஈரோட்டில் கைது செய்யப்பட்ட முகிலன் ஆகிய 2 பேரும் வள்ளியூர் நீதிமன்றத்தில் நேற்று ஆஜராகினர். அவர்களை வரும் 18ம் தேதி வரை திருச்சி சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.
-
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா?












Click it and Unblock the Notifications