விளாத்திகுளம் நீதிமன்றத்தில் களேபரம்- நீதிபதி முன் ஊழியருக்கு சராமரி அடி, உதை
கோவில்பட்டி: விளாத்திகுளம் நீதிமன்றத்தில் நீதிபதி கண்முன் ஊழியரை கொலைக் குற்றவாளி தாக்கியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
தூத்துக்குடி மாவட்டம் விளத்திகுளம் அருகே உள்ள அயன்பொம்மையாபுரத்தை சேர்ந்தவர் மாரியப்பன். இவரது மகன் ரவி என்ற ராமன். தந்தை, மகன் இருவரும் ஒரிசா மாநிலத்தில் சிமிண்ட் தொட்டி தயாரிக்கும் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தனர். இந்நிலையில் அவர்கள் கடந்த 3 மாதத்திற்கு முன்னர் அயன்பொம்மையாபுரத்துக்கு வந்து விட்டனர். மீண்டும் ஒரிசாவுக்கு செல்லாமல் ஊரை சுற்றிவந்திருக்கிறார் ரவி. இதைத் தட்டிக்கேட்டதால் பாட்டியை அரிவாளால் ரவி வெட்டிக் கொன்றுவிட்டு வீட்டைப் பூட்டிக் கொண்டார்.
இதையடுத்து விளாத்திகுளம் போலீசாருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆனால் தம்மை கைது செய்தால் போலீசாரையும் வெட்டுவேன் என்று ரவி மிரட்டியதால் அவனை சாமர்த்தியமாக பிடிக்க போலீசார் திட்டமிட்டனர்.
அங்கிருந்தவர்களிடம் மிளகாப் பொடியை வாங்கி கையில் வைத்துக் கொண்ட போலீசார் கதவை உடைத்து உள்ளே சென்று ரவியின் முகத்தில் மிளகாய் பொடியைத் தூவி மடக்கினர்.
பின்னர் அவரை கைது செய்து விளாத்திகுளம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அப்போது நீதிமன்ற ஊழியர் முத்துசாமி கொலை பற்றி விவரங்களைக் கேட்டிருந்தார். திடீரென ஊழியர் முத்துசாமியின் கன்னத்தில் அறைந்த ரவி அவரை சராமரியாகத் தாக்கினார். இதைத் தொடர்ந்து போலீசார் ரவியை மடக்கிப் பிடித்து கட்டிப்போட்டனர்.
இச்சம்பவத்தால் விளாத்திகுளம் நீதிமன்ற வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
-
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங்












Click it and Unblock the Notifications