கள்ளக்காதல்: கல்யாணத்துக்காக 2 குழந்தைகளை கொன்ற ஆட்டோ டிரைவர், ஆசிரியை

Posted By:
Subscribe to Oneindia Tamil

மதுரை: கள்ளக்காதலியை மணக்க தனது 2 குழந்தைகளை கிணற்றில் வீசி்க் கொன்ற ஆட்டோ டிரைவரை போலீசார் கைது செய்தனர்.

மதுரை நாகமலைப்புதுக்கோட்டையை அடுத்துள்ள வடபழஞ்சி அம்பேத்கார் நகரைச் சேர்ந்தவர் திருப்பதி(25). ஆட்டோ டிரைவர். அவருடைய மனைவி கனகவள்ளி. அவர்களுக்கு ஸ்ரீதரன் (6) என்ற மகனும், ஸ்ரீஹரிணி (5) என்ற மகளும் இருந்தனர். இந்நிலையில் திருப்பதி நேற்று முன்தினம் தனது குழந்தைகளை ஆட்டோவில் அழைத்துச் சென்று கிணற்றில் வீசினர். 2 குழந்தைகளும் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.

இது குறித்து கனகவள்ளி நாகமலைப்புதுக்கோட்டை போலீசில் புகார் கொடுத்தார். அவரது புகாரின்பேரில் போலீசார் திருப்பதியைப் பிடித்து விசாரித்து அவரை கைது செய்தனர்.

விசாரணையின்போது தெரிய வந்த விவரம் வருமாறு,

திருப்பதி ஆட்டோ டிரைவர் என்பதால் பல கிராமங்களுக்கும் சென்று வருவார். அப்போது மங்கள்ரேவ் பகுதியைச் சேர்ந்த பிரேமலதா(32) என்பவருடன் அவருக்கு பழக்கம் ஏற்பட்டது. அவர் ஏழுமலை அரசு பள்ளியில் ஆசிரியையாக உள்ளார். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு அவருடைய கணவர் சாலை விபத்தில் பலியானார். இதையடு்தது பிரேமலதா தனது ஆண் குழந்தையுடன் தனியாக வசித்து வருகிறார்.

இந்நிலையில் திருப்பிதியின் ஆட்டோவில் அடிக்கடி சென்றதால் அவர்களின் பழக்கம் கள்ளக்காதலானது. இதையடுத்து அவர்கள் பல்வேறு இடங்களுக்கு சென்று உல்லாசமாக இருந்துள்ளனர். இது குறி்த்து தெரிய வந்ததும் கனகவள்ளிக்கும், திருப்பதிக்ககும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே திருப்பதி பிரேமலதாவை மணக்க விரும்பினார்.

அவர் தனது விருப்பத்தைக் கூறியபோது "நமது திருமணத்திற்கு தடையாக உள்ள உனது குழந்தைகளை கொன்று விடவேண்டும். அதன் பின்னர் திருமணம் செய்து கொள்ளலாம்'' என்று பிரேமலதா தெரிவித்ததாகத் தெரிகிறது.

காதலிக்காக குழந்தைகளைக் கொல்வது என்று திருப்பதி முடிவு செய்தார். அவர் தனது நண்பர் பெரியகருப்பனிடம் உதவி செய்யுமாறு கேட்டுள்ளார். அவரும் குழந்தைகளைக் கொல்ல உதவி செய்தார். இந்த தகவல்கள் விசாரணையில் தெரிய வந்தது.

திருப்பதி கொடுத்த வாக்குமூலத்தை வைத்து பிரமேலதா, பெரியகருப்பன் ஆகியோரை நேற்று காலை போலீசார் கைது செய்தனர்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
A 25-year old auto driver Tirupathi killed his 2 kids to marry his illicit love Premalatha, a school teacher. Police have arrested Tirupathi, Premalatha and his friend Periyakaruppan.
Please Wait while comments are loading...

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற