ஒரிசா... சத்தீஸ்கரைத் தொடர்ந்து மஹாராஷ்டிராவில் 10 பேரை கடத்தினர் மாவோயிஸ்டுகள்
Subscribe to Oneindia Tamil
டெல்லி: ஒடிசா மாநில ஆளும் பிஜூ ஜனதா தள எம்.எல்.ஏ. ஜினா ஹிகாவை விடுவித்த சில மணிநேரங்களிலேயே மாவோயிஸ்டுகள் மீண்டும் ஒரு கடத்தலை அரங்கேற்றியுள்ளனர். இப்போது நடந்திருப்பது மஹாராஷ்டிரா மாநிலத்தில்!
மஹாராஷ்டிராவில் கட்ச்ரோலி மாவட்டத்தில் 12 கிராமவாசிகளை கடத்திச் சென்ற மாவோயிஸ்டுகள் அவர்களில் 2 பேரை சுட்டுக் கொன்றதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கட்ச்ரோலி மாவட்டத்தில் மத்திய ரிசர்வ் பாதுகாப்பு படையினர் மேற்கொண்டு வரும் தங்களுக்கு எதிரான நடவடிக்கையை உடனே நிறுத்த வேண்டும் என்பது மாவோயிஸ்டுகளின் கோரிக்கை.
சத்தீஸ்கர் மாவட்டத்தில் ஆட்சியர் அலெக்ஸ்பால் மேனனை பிணைக் கைதியாக வைத்துள்ள மாவோயிஸ்டுகள் மஹாராஷ்டிராவிலும் தங்களது தாக்குதலை வெளிப்படுத்தியிருக்கின்றனர்.












Click it and Unblock the Notifications