புதுக்கோட்டை இடைத்தேர்தல்: திமுக முடிவெடுக்கவில்லை- ஸ்டாலின்

மு.க.ஸ்டாலின் ஊட்டியில் 3 நாட்கள் ஓய்வெடுக்க உள்ளார். குன்னூர் செல்லும் வழியில் ஊட்டி வந்த அவருக்கு திமுகவினர் சிறப்பான வரவேற்பு அளித்தனர். 27 மற்றும் 28 ஆகிய 2 நாட்கள் குன்னூரில் தங்கியிருக்கும் ஸ்டாலின், 28ம் தேதி மாலை ஊட்டியில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பேசுகிறார்.
ஊட்டியில் நிருபர்களிடம் பேசிய அவர், தமிழக சட்டப்பேரவையில் ஜெயலலிதாவ புகழ்பாடும் துதிபாடிகளுக்கே பேச வாய்ப்பு அளிக்கப்படுகிறது. மக்கள் பிரச்சனைகளை பேச எதிர்கட்சியினரை சேர்ந்தவர்களுக்கு அனுமதி தருவதில்லை.
இதனால் ஜனநாயகம் படும் பாடு என்ற தலைப்பில் தமிழகம் முழுவதும் பேச உள்ளோம். ஊட்டியில் இதனை வலியுறுத்தி நாளை மறுநாள் போராட்டம் நடைபெற உள்ளது.
சட்டப்பேரவைத் தேர்தலின்போது அதிமுக கூட்டணியில் இருந்த கட்சிகள் தற்போது அந்த கூட்டணியில் இருந்து விலகியுள்ளன. அக்கட்சிகள் திமுக கூட்டணியில் சேர விரும்பினால் அவர்களுக்காக கதவு திறந்து உள்ளது. கூட்டணியில் சேர விருப்பம் தெரிவித்தால் அதுகுறித்து பரிசீலிப்போம்.
திமுகவில் தலைமை பொறுப்புக்கு எந்த போட்டியும் இல்லை. மீடியாக்கள்தான் அதை பெரிதுபடுத்துகின்றன. அதிமுகவில் ஜெயலலிதா-சசிகலா சண்டைதான் பெரிய சண்டை. அதைவிட்டுவிட்டு திமுகவில் சிறிய சிறிய பிரச்சனைகளைக் கூட மீடியாக்கள் பெரிதுபடுத்துகின்றன என்றார்.
மத்திய அமைச்சர் மு.க.அழகிரியுடனான பிரச்சனையால் கடந்த வாரம் முழுவதையும் டென்சனிலேயே கழித்த ஸ்டாலின், அரசியல் வெப்பத்துக்கு இதமாக ஊட்டிக்கு வந்துள்ளார்.
கமல் கூட கலந்து கொண்டார்...:
முன்னதாக நேற்று சென்னையில் நடந்த பொதுக் கூட்டத்தில் பேசிய ஸ்டாலின், திமுகவினர் மீது நில அபகரிப்பு வழக்குகள் பதிவு செய்கிறார்கள். என் மீதும், என் மகன் மீதும் யாரோ ஒருவரின் வீட்டை அபகரித்துவிட்டதாக வழக்குபதிவு செய்திருக்கிறார்கள். அதை சட்டமன்றத்திலும் ஜெயலலிதா கூறியிருக்கிறார்.
நாங்கள் யாரையும் வற்புறுத்தி வீட்டை வாங்கவில்லை என்பதை எங்களால் நிரூபிக்க முடியும். பொது ஏலத்துக்கு வந்த வீட்டைதான் நாங்கள் வாங்கினோம். இந்த ஏலத்தில் கூட கமலஹாசன் உள்பட பலர் கலந்து கொண்டனர். ஆகவே உண்மை தெரியாமல் பேசக்கூடாது.
ஜெயலலிதா மீது நில அபகரிப்பு வழக்கு இல்லையா?. சிறுதாவூர், கொடநாடு நில விவகாரங்கள் எல்லாம் மக்களுக்குத் தெரியாதா?. அந்த வகையில் பார்த்தால் முதலில் கைது செய்யப்பட வேண்டியது ஜெயலலிதா தான் என்றார் ஸ்டாலின்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications