Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மக்கள் நலப் பணியாளர்களுக்கு 5 மாத சம்பளம் வழங்க ரெடி: தமிழக அரசு அறிவிப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை: கடந்த நவம்பர் மாதம் 8ம் தேதி இரவோடு இரவாக பணிநீக்கம் செய்யப்பட்ட 13,500 மக்கள் நலப் பணியாளர்களுக்கு 5 மாத சம்பளத்தை ஒரே தவணையில் கொடுக்க தயார் என்று தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

திமுக ஆட்சியில் நியமிக்கப்பட்ட மக்கள் நலப் பணியாளர்கள் 13,500 பேரை அதிமுக அரசு கடந்த நவம்பர் மாதம் 8ம் தேதி இரவோடு இரவாக பணிநீக்கம் செய்தது. இதை எதிர்த்து தமிழ்நாடு மக்கள் நலப் பணியாளர்கள் முன்னேற்ற சங்கம், திண்டுக்கல் மாவட்ட மக்கள் நலப் பணியாளர்கள் நலச்சங்கம் ஆகியவை சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி சுகுணா பணி நீக்க உத்தரவை ரத்து செய்து, அவர்களை உடனே பணியில் சேர்க்குமாறு தமிழக அரசுக்கு உத்தரவிட்டார். ஆனால் தமிழக அரசு இந்த தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்தது.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் தர்மராவ், வேணுகோபால் அடங்கிய பெஞ்ச் நீதிபதி சுகுணாவின் உத்தரவுக்கு தடை விதித்தது. இதை எதிர்த்து மக்கள் நலப் பணியாளர்கள் மேல்முறையீடு செய்தனர்.

இந்த மனு நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள் மக்கள் நலப் பணியார்களுக்கு வேலையில் இருந்து நீக்கப்பட்ட காலத்திற்கு சம்பளம் வழங்க அரசு முன்வர வேண்டும் என்று கூறியதுடன், இது குறித்து அரசிடம் கருத்து கேட்டு அதை நீதிமன்றத்தில் தெரிவிக்குமாறு அட்வகேட் ஜெனரலுக்கு உத்தரவிட்டனர்.

இந்நிலையில் இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது மக்கள் நலப் பணியாளர்களுக்கு 3 மாத சம்பளம் வழங்க அரசு தயாராக உள்ளதாக அட்வகேட் ஜெனரல் நவநீதகிருஷ்ணன் தெரிவித்தார். இதை ஏற்க மக்கள் நல்ப பணியாளர்கள் சங்க வழக்கறிஞர் மறுத்தார். இதையடுத்து 2 தரப்பும் கலந்து பேசி ஒரு முடிவை எடுக்குமாறு நீதிபதிகள் தெரிவித்தனர்.

அதன் பிறகு மக்கள் நலப் பணியாளர்களுக்கு 5 மாத சம்பளத்தை ஒரே தவணையில் மே மாத இறுத்திக்குள் வழங்க தமிழக அரசு தயார் என்று நவநீதகிருஷ்ணன் தெரிவித்தார். இதை மக்கள் நலப் பணியாளர்கள் தரப்பு ஏற்றுக்கொண்டதையடுத்து நீதிபதிகள் வழக்கை பைசல் செய்து வைத்தனர். மேலும் அரசின் வாக்கை பதிவு செய்தனர்.

இது தவிர அரசுக்கு எதிராக மக்கள் நலப் பணியாளர்கள் தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கும் முடித்து வைக்கப்பட்டது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+