முன்னேறிச் செல்வோம்.. ஒபாமாவின் புதிய கோஷம்!
வாஷிங்டன்: நம்மால் முடியும் என்ற கோஷத்துடன் கடந்த அதிபர் தேர்தலைச் சந்தித்து வரலாறு காணாத வெற்றியைப் பெற்ற பராக் ஒபாமா, தனது 2வது அதிபர் தேர்தலில் முன்னேறிச் செல்வோம் என்ற புதிய கோஷத்துடன் களம் இறங்கியுள்ளார்.
பார்வர்ட்... இதுதான் ஒபாமாவின் புதிய ஸ்லோகன். முந்தைய தேர்தலில் அவர் முன்வைத்த கோஷம் எஸ், வி கேன். உலகெங்கும் பெரும் பிரபலமான வார்த்தை இது. இதை வைத்து நம்ம ஊரில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ ஒரு நூலையே எழுதி அதை ஒபாமாவிடமும் கொடுத்து அசத்தினார் என்பது நினைவிருக்கலாம்.
இப்போது 2வது முறையாக அதிபர் தேர்தலில் நிற்கிறார் ஒபாமா. இந்த முறை அவர் பார்வர்ட் என்ற சுருக்கமான வாசகத்தை தனது தேர்தல் கோஷமாக கையில் எடுத்துள்ளார்.
இந்த புதிய கோஷத்துடன் கூடிய முதல் பிரசார வீடியோவை ஒபாமா பிரசாரக் குழுவினர் திங்கள்கிழமை வெளியிட்டனர். ஏழு நிமிடம் ஓடும் இந்த வீடியோவில், ஒபாமா ஆட்சிப் பொறுப்புக்கு வந்தபோது அமெரிக்காவில் நிலவிய பொருளாதார மந்த நிலையும், பின்னர் ஏற்பட்ட மாற்றங்களையும் விவரித்துள்ளனர்.
பொருளாதாரம் மட்டுமல்லாமல் பிற பிரச்சினைகளிலும் ஒபாமா அரசு எடுத்த நடவடிக்கைகளையும் இவர்கள் ரத்தினச் சுருக்கமாக விவரித்துள்ளனர்.
இத்தனையையும் சொல்லிய பின்னர், இன்னும் முன்னெடுத்துச் செல்ல வேண்டியது நிறைய உள்ளது. அதற்காக நாம் முன்னேறிச் செல்வோம் என்று கூறி பிரசாரத்தை முடித்துள்ளனர்.
இந்த பிரசார வீடியோவை, ஒஹையோ மற்றும் விர்ஜீனியாவில் அதிபர் பராக் ஒபாமா கலந்து கொள்ளவுள்ள முதல் பிரசாரக் கூட்டத்தில் ஒளிபரப்பவுள்ளனர்.
-
"ஹார்முஸை நெருங்கினாலே சரமாரி தாக்குதல் நடத்துவோம்.." அச்சுறுத்தும் ஈரான்.. அமைதி ஒப்பந்தம் காலி -
டென்ஷனான இந்தியா.. அமெரிக்க தூதரக பொறுப்பாளரை நேரில் அழைத்து சம்மன்.. பரபரப்பு சம்பவத்தின் பின்னணி -
பேரழிவு வர போகுது.. ஈரானுக்கு நேரடியாக டிரம்ப் தந்த மரண வார்னிங்.. மீண்டும் வெடிக்கும் போர் -
அமெரிக்காவில் இந்திய தொழிலதிபர் குடியுரிமை பறிப்பு.! டிரம்ப் அரசு அதிரடி நடவடிக்கை.. பரபர பின்னணி -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு?












Click it and Unblock the Notifications