தமிழக வியாபாரியை யாழ்ப்பாணத்தில் கொடூரமாக தாக்கிய மர்ம கும்பல்!
Subscribe to Oneindia Tamil

யாழ்ப்பாணம் திருநெல்வேலி கலாசாலை வீதியில் தமிழக வியாபாரியான ஜெகநாதன் வழக்கம் போல் சைக்கிளில் சுடிதார் உள்ளிட்ட ஆடைகளை விற்பனை செய்து வந்துள்ளார். அப்போது மோட்டார் சைக்கிளில் ஹெல்மெட் அணிந்தபடி வந்த மர்ம கும்பல் ஒன்று ஜெகநாதனை உதைத்துத் தாக்கியிருக்கிறது.
இதில் படுகாயமடைந்த ஜெகநாதன் யாழ்ப்பாண மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பொதுமக்களால் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார்.
தாக்குதலுக்குள்ளான ஜெகநாதன், திருநெல்வேலி பால்பண்ணையை அடுத்த கிராமத்தில் 3 ஆண்டுகளாக தங்கி ஆடை வியாபாரம் செய்து வந்தவர். இச்சம்பவம் குறித்து யாழ்ப்பாணம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications