ஆட்சி தான் மாறியுள்ளது, காட்சி மாறவில்லை: ஜி.ராமகிருஷ்ணன் குற்றச்சாட்டு
குடியாத்தம்: அன்று திமுக ஆட்சியில் என்னவெல்லாம் நடந்ததோ, அதே காட்சி தான் தற்போது அதிமுக ஆட்சியிலும் நடக்கிறது என்று சிபிம் மாநில செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன் குற்றம் சாட்டியுள்ளார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நடந்த பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்ட அக்கட்சியின் மாநில செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன் பேசியதாவது,
கடந்த சட்டமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி புதுக்கோட்டையில் வெற்றி பெற்றது. அந்த தொகுதியில் இருந்து தேர்வு செய்யப்பட்ட முத்துக்குமரன் விபத்தில் பலியானதால் இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இடைத்தேர்தலில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி போட்டியிட அதிமுக தலைமைக்கு கடிதம் எழுதியது.
ஆனால் அந்த கட்சியுடன் பேச்சுவார்த்தை நடத்தாமல் அதிமுக தன்னிச்சையாக வேட்பாளரை அறிவித்துள்ளது. கூட்டணி விதிகளின்படி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி போட்டியிட அதிமுக வாய்ப்பு வழங்கியிருக்க வேண்டும். ஆனால் அவ்வாறு வழங்கவில்லை.
இந்த தேர்தலில் அதிமுக தில்லு முல்லு செய்யும். தேர்தல் நேர்மையாக நடக்காது என்று கூறி திமுக தேர்தலை புறக்கணித்துள்ளது. இதே போன்று மதிமுக, காங்கிரஸ் கட்சிகளும் தேர்தலில் போட்டியிடவில்லை.
கடந்த 2006 முதல் 2011ம் ஆண்டு வரை திருமங்கலம், தொண்டாமுத்தூர், பர்கூர், கம்பம் ஆகிய தொகுதிகளில் நடந்த இடைத்தேர்தல்களில் பணம் ஆறாக ஓடியது. அதிகார துஷ்பிரயோகம், தில்லு முல்லு, அராஜகம், வன்முறை நடைபெற்றதாகக் கூறி அதிமுக தேர்தலை புறக்கணித்தது.
அன்று திமுக ஆட்சியில் என்னவெல்லாம் நடந்ததோ, அதே காட்சி தான் தற்போது அதிமுக ஆட்சியில் சங்கரன்கோவில் இடைத்தேர்தலில் அரங்கேறியது. தற்போதும் அதே தான் நடக்கப் போகின்றது. இந்த இரு கட்சிகளின் அத்துமீறல்களுக்கு எதிராக நிற்க மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அஞ்சாது. எந்தக் கட்சியையும் தீரமுடன் களத்தில் நின்று எதிர்க்கும் வல்லமை உண்டு என்றார்.
-
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு?












Click it and Unblock the Notifications