பிறமொழி பாடம் எடுத்து படித்தவர்களில் சென்னை மாணவி பவித்ரா முதலிடம்
சென்னை: தமிழ் அல்லாத பிறமொழியை மொழிப்பாடமாக எடுத்து படித்தவர்களில் சென்னை மாணவி பவித்ரா 1200க்கு 1,190 மதிப்பெண்கள் பெற்று மாநிலத்தில் முதலிடம் பெற்றுள்ளார்.
தமிழகத்தில் பிளஸ் டூ தேர்வு முடிவுகள் நேற்று வெளியாகின. இதில் தமிழ் அல்லாத பிறமொழியை மொழிப்பாடமாக எடுத்து படித்தவர்களில் சென்னை மாணவி பவித்ரா 1200க்கு 1,190 மதிப்பெண்கள் பெற்று மாநிலத்தில் முதலிடம் பெற்றுள்ளார்.
பிறமொழியை மொழிப்பாடமாக எடுத்து படித்தவர்களில் சென்னை மடிப்பாக்கம் பிரின்ஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த வி. பவித்ரா( சமஸ்கிருதம்) மற்றும் புதுவை செயின்ட் ஜோசப் குளூனி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவி எஸ்.ஸ்வப்னா(பிரெஞ்ச்) ஆகிய இருவரும் 1,200க்கு 1,190 மதிப்பெண்கள் பெற்று முதலிடத்தைப் பெற்றுள்ளனர்.
1,189 மதிப்பெண்கள் பெற்று 3 பேர் இரணடாம் இடத்தையும், 1,188 மதிப்பெண்கள் பெற்று 12 பேர் மூன்றாம் இடத்தையும் பிடித்துள்ளனர்.
மாநிலத்தில் முதலாவதாக வந்துள்ள பவித்ரா அண்ணா பல்கலைக்கழகத்தில் சேர்ந்து படிக்க விருப்பம் தெரிவித்துள்ளார். அதற்காகத் தான் இவ்வளவு மதிப்பெண்கள் வாங்கியதாகவும் அவர் தெரிவித்தார்.
பிரெஞ்ச் மொழியை எடுத்துப் பயின்று 1,189 மதிப்பெண்கள் பெற்று மாநிலத்திலேயே 2வது மாணவியாக வந்துள்ள சென்னை அண்ணாநகர் ஜேசிஸ் மோசஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவி ஆன்சி பிலிப் பி.இ. எலக்ட்ரானிக்ஸ் படித்த பிறகு ஐ.ஏ.எஸ். அதிகாரியாகி நாட்டு மக்களுக்கு சேவை செய்ய விரும்புவதாகத் தெரிவித்தார்.
-
4 மணி நேர மின்வெட்டு.. சென்னை ஆவடியில் கொந்தளித்த மக்கள்! சாலை மறியலால் போக்குவரத்து பாதிப்பு! -
பெங்களூரு, மும்பை எல்லாம் ஓரம் போ.. சம்பள உயர்வு அதிகம் கொடுப்பதில் இந்த சிட்டிதான் டாப்! -
சர்க்கரை அட்டை உங்களிடம் இருக்கா? சென்னை மக்களுக்கு ஒரே நாளில் பெயர் மாற்றத் தீர்வு தரும் தமிழக அரசு -
பெங்களூருக்கு வேட்டு! இந்தியாவிலேயே அதிக சம்பள உயர்வு கிடைக்கும் நகரம் எது தெரியுமா? -
சென்னையில் இன்று விளாசப் போகுது மழை.. நெல்லை, குமரி உள்பட 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல்












Click it and Unblock the Notifications