திருமணத்துக்குப் பிறகு 11 ஆண்டுகள் கழித்து தேர்வெழுதி சாதித்த நாகம்மாள்!
கோயம்புத்தூர்: கோயம்புத்தூரில் திருமணம் முடிந்து 11 ஆண்டுகள் கழித்து பிளஸ் டூ தேர்வெழுதிய பெண் 920 மதிப்பெண்கள் பெற்று எல்லோரையும் திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறார்.
கர்நாடகத்தைச் சேர்ந்தவர் முத்து நாகம்மாள். கடந்த 2001-ம் ஆண்டு 10-ம் வகுப்பு முடித்தவுடன் பொள்ளாச்சியைச் சேர்ந்த தூயவனுடன் திருமணமானது. பொள்ளாச்சியில் தனியார் கூரியர் நிறுவனத்தில் தூயவன் வேலை செய்கிறார். இவர்களது மகன் 4-ம் வகுப்பு படிக்கிறார்.
வீட்டு பொருளாதாரத்துக்கு கை கொடுக்க நினைத்த நாகம்மாள் பட்டப் படிப்புக்கு முயற்சித்தார். ஆனால் பிளஸ் டூ படித்து பட்டம் பெற்றால் பயனிருக்கும் என்று நண்பர்கள் கூறிய ஆலோசனையால் டுடோரியல் சென்று தீவிரமாக படித்தார். அதுவரை பார்த்துக் கொண்டிருந்த வேலையையும் கைவிட்டுவிட்டு தமக்குத் தாமே ஆசிரியராக இருந்து படித்து தேர்வெழுதினார்.
நேற்று வெளியான பிளஸ் டூ தேர்வு முடிவுகளில் முத்து நாகம்மாள் பெற்ற மொத்த மதிப்பெண்கள் 920. தமிழ் 158, ஆங்கிலம் 140, பொருளாதாரம் 159, வணிகவியல் 156, கணக்குப் பதிவியல் 164, வணிகக் கணிதம் 143 என அசத்தியிருக்கிறார் நம்பிக்கைக்கு முன்னுதாரணமான நாகம்மாள்.
-
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு? -
விஜய்யின் கனவு திட்டம்.. கூவம், அடையாறு ஆறுகளை மாற்றப்போகும் மாஸ்டர்பிளான்.. கைகோர்க்கும் டெல்லி












Click it and Unblock the Notifications