இலங்கை சிறைகளில் விசாரணையின்றி அல்லல்படும் ஈழத்தமிழர்களை உடனே விடுவிக்க வேண்டும்: வைகோ வேண்டுகோள்
சென்னை: சிறைக்கொட்டடிகளில் கைதிகளாக இருக்கும் தமிழர்களை இலங்கை அரசு விடுவிக்க ஐ.நா. மன்றமும், மனித உரிமை ஆணையமும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கேட்டுக் கொண்டுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
கொழும்பு மாவட்டத்தில் உள்ளவெலிக்கடைச் சிறை, மகசின் சிறை, கொழும்பு மத்தியச் சிறை, கண்டி மாவட்டம் பூகம்பறை சிறை, காலி மாவட்டம் பூசா சிறை, வவுனியா மாவட்டச் சிறை, அநுராதபுரம் மாவட்டச் சிறை, யாழ்ப்பாணம் மாவட்டச் சிறை ஆகிய சிறைகளில் 4,000 பேர் விசாரணை இன்றி அடைக்கப்பட்டு, துன்புறுத்தப்பட்டு வருகின்றனர்.
பொலனருவா மாவட்டம் வெலிக்கந்தை முகாமில் 2,000 பேரும், வவுனியா மாவட்டத்தில் கணேசபுரம் முகாம், மட்டக்களப்பு மாவட்டம் கந்தக்காடு முகாம் இரண்டிலும், இரண்டாயிரம் தமிழர்களும் ஏறத்தாழ கைதிகளாகவே அடைத்து வைக்கப்பட்டு உள்ளனர்.
இந்த இடங்களில் எவ்வித அடிப்படை வசதிகளும் கிடையாது. உற்றார், உறவினரை இழந்து, உரிமைகள் இழந்து, சித்ரவதைகளுக்கு ஆளாகி, சிறைக்கொட்டடிகளில் கைதிகளாக அடைத்து வைக்கப்பட்டு இருப்பவர்களை சிங்கள அரசு விடுவிக்க ஐ.நா. மன்றமும், மனித உரிமை ஆணையமும் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
இந்திய அரசு, மேலும் மேலும் குற்றச்சாட்டுக்கும், பழிக்கும் ஆளாகாமல், தமிழர்களைச் சிறையில் இருந்து விடுவிக்க இலங்கை அரசை நிர்ப்பந்திக்க வேண்டும் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.
-
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு? -
விஜய்யின் கனவு திட்டம்.. கூவம், அடையாறு ஆறுகளை மாற்றப்போகும் மாஸ்டர்பிளான்.. கைகோர்க்கும் டெல்லி












Click it and Unblock the Notifications