கால நேரம் பார்க்காமல் 'அழைத்த' கள்ளக்காதலனை போட்டுத் தள்ளிய பெண்!
நெல்லை: அழைக்கும்போதெல்லாம் வர வேண்டும் என்று அதட்டியதோடு நில்லாமல், பெற்ற மகன்களுக்கு முன்பாகவே தன்னை உறவுக்கு அழைத்த கள்ளக்காதலன் மீது ஆத்திரம் கொண்ட பெண், அவரை கரடுமுரடாகத் தாக்கிக் கொலை செய்தார்.
நெல்லை மாவட்டம் கரிவலம்வந்தவல்லூர் அருகே உள்ளது பச்சேரி கிராமம். அங்குள்ள கிணற்றில் சமீபத்தில் ஒரு ஆணின் உடல் மிதந்தது. அதுகுறித்துப் போலீஸாருக்குத் தகவல் வந்தது. விரைந்து சென்ற போலீஸார் உடலைக் கைப்பற்றி விசாரணை நடத்தினர்.
செத்துக் கிடந்த நபரின் பெயர் முருகன் என்றும், தச்சர் என்றும், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள மடவார்குளத்தைச் சேர்ந்தவர் என்றும் தெரிய வந்தது. அவரை சரமாரியாக தலையில் கம்பால் அடித்தும், கழுத்தை நெரித்தும் கொலை செய்தது தெரிய வந்தது.
இதையடுத்து போலீஸார் விசாரணையை முடுக்கி விட்டனர். அதில், லட்சுமி என்ற 40 வயது பெண் சிக்கினார். இவர் பச்சேரி மாடசாமியின் மனைவி ஆவார். மாடசாமி மனைவியை விட்டுப் பிரிந்து போய் விட்டாராம். இதையடுத்து கட்டட வேலைக்குப் போய் வருகிறார் லட்சுமி. போன இடத்தில் முருகனுடன் தொடர்பாகி விட்டது. இந்த காதலை இருவரும் ரகசியமாக தொடர்ந்து வந்தனர்.
வெளியூர்களில் இருந்து வந்த கள்ளத்தனமான தொடர்பை தனது சொந்த ஊருக்கு வந்த பிறகும் நீடித்து வந்துள்ளார் லட்சுமி. அவ்வப்போது இருவரும் தொடர்பு வைத்துக் கொண்டு வந்தனர்.
இந்தநிலையில் நல்ல குடிபோதையில் கடந்த 6ம் தேதி லட்சுமி வீட்டுக்கு இரவில் வந்துள்ளார் முருகன். அப்போது லட்சுமி தனது மகன்களோடு வீடடில் இருந்தார். நேராக வீட்டுக்குள் புகுந்து முருகன், உறவு கொள்ளலாம் வா என்று லட்சுமியை அவரது மகன்களுக்கு முன்பாகவே அழைத்துள்ளார். இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்தார் லட்சுமி.
ஆனால் அதைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல் தன் காரியமே குறியாக இருந்த முருகன், லட்சுமியை தொடர்ந்து வற்புறுத்தியுள்ளார். இதனால் கடும் ஆத்திரமடைந்தார் லட்சுமி. உடனடியாக முருகனை அருகில் உள்ள தோட்டத்திற்குக் கூட்டிச் சென்றார். அங்கு வைத்து வாக்குவாதம் மூண்டுள்ளது. கூப்பிடும்போதெல்லாம் நீர வர வேண்டும் என்று முருகன் கூற, லட்சுமி அதற்கு மறுக்க அப்போது லட்சுமியை அடித்துள்ளார் முருகன்.
இதனால் வெகுண்ட லட்சுமி, ஒரு கம்பை எடுத்து முருகன் தலையில் சரமாரியாக அடித்தார். பின்னர் கழுத்தையும் நெரித்துள்ளார். இதில் முருகன் செத்துப் போனார். உடனடியாக தனி ஆளாக முருகன் உடலை தூக்கி கிணற்றில் வீசி விட்டு போய் விட்டார் லட்சுமி.
போலீஸார் லட்சுமியைக் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
-
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு? -
விஜய்யின் கனவு திட்டம்.. கூவம், அடையாறு ஆறுகளை மாற்றப்போகும் மாஸ்டர்பிளான்.. கைகோர்க்கும் டெல்லி












Click it and Unblock the Notifications