எகிபதில் புரட்சிக்குப் பின் இன்று முதல் அதிபர் தேர்தலுக்கான வாக்குப் பதிவு
கெய்ரோ: எகிப்தில் ஹோஸ்னி முபாரக்கின் சர்வாதிகார ஆட்சியை புரட்சியின் மூலம் வீழ்த்தப்பட்ட பிறகு இன்று அந்நாட்டில் அதிபர் தேர்தலுக்கான வாக்குப் பதிவு நடைபெற்றது.
எகிப்தில் 32 ஆண்டுகாலம் ஹொஸ்னி முபாரக் ஆட்சி நடத்தினார். அவரது சர்வாதிகார ஆட்சிக்கு எதிராக கடந்த ஆண்டு ஜனநாயக வழியில் பொதுமக்கள் போராடினர். கடந்த பிப்ரவரி மாதம் முபாரக்கின் ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து அங்கு ராணுவம் சார்பில் இடைக்கால அரசு அமைக்கப்பட்டிருந்தது.
பின்னர் புதிய அதிபருக்கான தேர்தல் இன்று நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. இன்றைய தேர்தலில் முன்னாள் பிரதமரும், விமானப்படை முன்னாள் கமாண்டருமான அகமது ஷபீப், முன்னாள் மந்திரி அமர் மூசா, முஸ்லிம் சகோதரத்துவ சுதந்திர நீதி கட்சியை சேர்ந்த மொகமது முர்சி, சுதந்திர இஸ்லாமிய கட்சியை சேர்ந்த அப்துல் முனீம் அப்துல் போடக் உள்ளிட்ட 13 பேர் வேட்பாளர்களாக களத்தில் நிற்கின்றனர்.
அவர்களில் முஸ்லிம் சகோதரத்துவ சுதந்திர நீதி கட்சியை சேர்ந்த மொகமது முர்சி மற்றும் சுதந்திர இஸ்லாமிய கட்சியை சேர்ந்த அப்துல் முனீம் அப்துல போடக் குக்கும் இடையேதான் கடும் போட்டி நிலவுகிறது.
நாடு முழுவதும் அமைக்கப்பட்டுள்ள 13 ஆயிரம் வாக்கு சாவடிகளில் காலை முதலே மக்கள் ஆர்வத்துடன் வாக்களித்தனர். நாளை வரை வாக்குப் பதிவு நடைபெற உள்ளது. மொத்த வாக்காளர்கள் 5 கோடி பேர்.
எகிப்தில் ஜனநாயக வழியில் 60 ஆண்டுகளுக்கு முன்புதான் அதிபர் தேர்தல் நடைபெற்றது. அதன் பின்னர் தற்போதுதான் மக்கள் வாக்களிப்பின் மூலமதிபர் தேர்ந்தெடுக்கப்படுகிறார். 32 ஆண்டுகாலம் ஆட்சியில் இருந்த முபாரக்கோ ராணுவப் புரட்சியின் மூலம் அதிகாரத்தைக் கைப்பற்றியவர்.
எகிப்தில் அதிபர் தேர்தல் வாக்குப் பதிவை சர்வதேச அமைப்புகளும் நாடுகளும் உன்னிப்பாக கவனித்து வருகின்ற்ன.
-
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு? -
விஜய்யின் கனவு திட்டம்.. கூவம், அடையாறு ஆறுகளை மாற்றப்போகும் மாஸ்டர்பிளான்.. கைகோர்க்கும் டெல்லி












Click it and Unblock the Notifications