For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

குடியரசுத் தலைவராக அப்துல்கலாமையே தேர்ந்தெடுக்க கி. வீரமணி கோரிக்கை

By Mathi
Google Oneindia Tamil News

Veeramani
சென்னை: குடியரசுத் தலைவர் தேர்தலில் பொதுவேட்பாளராக மீண்டும் அப்துல்கலாமையே முன்னிறுத்த வேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக கி.வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

குடியரசு தலைவர் வேட்பாளராக முன்னாள் சபாநாயகர் பி.ஏ.சங்மாவை ஒரு தரப்பினர் அறிவித்துவிட்ட நிலையில், ஆளும் கூட்டணியாகிய ஐக்கிய முற்போக்கு கூட்டணி இன்னும் தமது வேட்பாளரை ஆய்வு செய்து கொண்டிருக்கும் நிலையே தொடர்கிறது.

ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் வேட்பாளராக முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாமை அறிவிக்க வேண்டும். அப்துல் கலாமை அறிவித்தால், பல எதிர்க்கட்சி வட்டாரங்களும் கூடி வரவேற்று ஆதரவு தருவதற்கு முன்வரக்கூடும். அவருடைய கனிந்த அனுபவ அடிப்படையில் உலகத்தின் பார்வையை வெகுவாக ஈர்த்த சர்வதேச புகழ் பெற்றவர், ஒரு சிறுபான்மை சமூகத்தவரானவர். அனைத்து தரப்புடனும் அன்போடு, பண்போடு பழகும் தண்மை கொண்டவர் அப்துல் கலாம் ஆவார் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

English summary
Dravidar Kazhagam Leader K. Veeramani has appealed to all political parties to second term President for A P J Abdul Kalam.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X