எலிசபெத் ராணி வைர விழா: லண்டனில் கோலாகல கொண்டாட்டம்
லண்டன்: இரண்டாம் எலிசபெத் மகாரணியின் வைரவிழா கொண்டாட்டத்தை ஒட்டி தேம்ஸ் நதியில் நடைபெறும் பிரம்மாண்டமான ஆயிரம் படகுகளின் அணிவகுப்பை காண லட்சக்கணக்கானோர் திரண்டுள்ளனர்.
இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் முடி சூட்டிக்கொண்ட 60-ம் ஆண்டு நிறைவு வைர விழா கொண்டாட்டம் சனிக்கிழமை லண்டனில் தொடங்கியுள்ளது. இதனையொட்டி லண்டன் விழாக்கோலம் பூண்டுள்ளது. இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் (வயது 86), தனது தந்தை மன்னர் ஆறாம் ஜார்ஜ் மறைவை தொடர்ந்து 1952-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 6-ந் தேதி பட்டத்துக்கு வந்தார். அவருக்கு 1953-ம் ஆண்டு ஜுன் மாதம் 2-ந் தேதி, வின்ஸ்டன் சர்ச்சில் பிரதமராக இருந்த காலகட்டத்தில் ராணி இரண்டாம் எலிசபெத்துக்கு முடி சூட்டப்பட்டது. சனிக்கிழமை அவர் முடிசூட்டிக்கொண்ட 60-வது ஆண்டு நிறைவு நாள் ஆகும். இதையொட்டி வைர விழா கொண்டாட்டங்கள் சனிக்கிழமை தொடங்கி செவ்வாய்க்கிழமை வரை கொண்டாடப்படுகின்றன.
ராணியின் வைர விழாவையொட்டி லண்டன் மாநகரம் களை கட்டி உள்ளது. வீதிகள் எங்கும் தேசியக்கொடிகள் பறக்க விடப்பட்டுள்ளன. அலங்கார விளக்குகள் தொங்க விடப்பட்டுள்ளன. வீதிகளில் மக்கள் மகிழ்ச்சியுடன் கூடி, ராணியின் வைர விழாவை கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர்.
ராணி முடிசூட்டிக் கொண்ட வைர விழா தொடங்கி விட்டது என்பதற்கு அடையாளமாக ஹாம்ப்ஷயரில் எச்எம்எஸ் டைமண்ட் போர்க்கப்பலில் இருந்து 21 முறை விண்ணை நோக்கி துப்பாக்கியால் சுட்டு ராணிக்கு மரியாதை செலுத்தப்பட்டது. ராணி எலிசபெத்துக்கு இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன், காண்டர்பரி ஆர்ச் பிஷப் டாக்டர் ரோவன் வில்லியம்ஸ் புகழாரம் சூட்டினர்.
வைர விழா கொண்டாட்டத்தையொட்டி சனிக்கிழமை ராணி எலிசபெத் திறந்தவெளி காரில் உலா வந்தார். தினந்தோறும் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமை தேம்ஸ் நதியில் ஆயிரம் படகுகளின் அணிவகுப்பு நடைபெறுகிறது. திங்கட்கிழமை பக்கிங்ஹாம் அரண்மனையில் மாபெரும் பாப் இசை விருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. செவ்வாய்க்கிழமை செயின்ட் பால் கதீட்ரல் தேவாலயத்தில் சிறப்பு பிரார்த்தனையுடன் விழா நிறைவு பெறுகிறது.
இங்கிலாந்து அரச குடும்பத்தில் மிக அதிக வயது வாழ்ந்து வருகிற பெருமையும் எலிசபெத் ராணிக்கு கிடைத்துள்ளது. இதன் காரணமாகவே லட்சக்கணக்கானோர் தங்களின் குடும்ப விழா போல இதனை கொண்டாடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications