For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சிறப்பு நிதி ஒதுக்கலை... எங்க பணத்தை செலவு செய்ய டெல்லியில் ஆலோசனை சொல்றாங்க...: ஜெ. விரக்தி

By Mathi
Google Oneindia Tamil News

Jayalalitha
டெல்லி: தமிழகத்துக்கு 2012-13 ஆம் ஆண்டு திட்டப் பணிகளுக்கு ரூ28 ஆயிரம் கோடி ஒதுக்க வேண்டும் என்ற தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் கோரிக்கைக்கு மத்திய அரசு ஒப்புதல் தெரிவித்துள்ளது. ஆனால் தமிழக அரசு கோரிய சிறப்பு நிதி ஒதுக்கீட்டை திட்ட்க குழு நிராகரித்துவிட்டது.

தமிழக முதல்வர் ஜெயலலிதா ஒருநாள் பயணமாக இன்று டெல்லி புறப்பட்டுச் சென்றார். அங்கு திட்டக் குழுவின் துணைத் தலைவர் மான்டேக்சிங் அலுவாலியாவை சந்தித்து தமிழகத்தின் நலத் திட்டங்களுக்கு ரூ28 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று ஜெயலலிதா கோரினார்.

இந்த கோரிக்கையை மான்டேக்சிங் அலுவாலியா ஏற்றுக் கொண்டுள்ளார். கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் தமிழகத்துக்கு கூடுதலாக ரூ4 ஆயிரத்து 465 கோடி கிடைத்துள்ளது. கடந்த ஆண்டு ரூ 23, 535 கோடி நிதி ஒதுக்கப்பட்டிருந்தது.

ஜெயலலலிதா விரக்தி

அலுவாலியாவுடனான சந்திப்புக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ஜெயலலிதா, சிறப்பு நிதி ஒதுக்குமாறு திட்டக் குழுவிடம் கேட்டோம். மத்திய அரசிடமிருந்து ரூ3 ஆயிரம் கோடிதான் கிடைத்திருக்கிறது. மற்ற ரூ25 ஆயிரம் கோடியும் தமிழ்கத்தின் சொந்தப் பணம். இந்தப் பணத்தை எப்படி செலவு செய்ய வேண்டும் என்று டெல்லியில் திட்டக்குழு எங்களுக்கு ஆலோசனை சொல்கிறது என்று விரக்தியான சிரிப்புடன் கூறினார்.

English summary
Tamil Nadu’s annual plan outlay for 2011-12 has been agreed at Rs 28, 000 crore.The annual plan outlay was approved at a meeting between the Chief Minister, Ms J. Jayalalithaa and Deputy Chairman, Planning Commission, Mr Montek Singh Ahluwalia on Monday.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X