Rasi Palan This Week: சிம்ம ராசிக்கு இனி சிங்கப் பாதை தான்.. அற்புதமான யோகம்.. இதில் மட்டும் கவனம்
Simmam Rasi Palan: மே 4 ஆம் தேதி முதல் மே 10 ஆம் தேதி வரை, சித்திரை 21 ஆம் தேதி முதல் சித்திரை 27 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான சிம்மம் ராசி பலன்கள், பரிகாரங்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
2026 புத்தாண்டில் பல்வேறு முக்கிய கிரகங்களின் இடமாற்றம் நடைபெறவுள்ளன. ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.

சித்திரை மாதம் பிறந்துள்ளது. சித்திரை என்பது சூரியன் சிம்மத்திற்கு வரக்கூடிய மாதமாகும். அந்த வகையில், மே 4 ஆம் தேதி முதல் மே 10 ஆம் தேதி வரை, சித்திரை 21 ஆம் தேதி முதல் சித்திரை 27 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான சிம்மம் ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம்.
சிம்மம் ராசி பலன் (Simmam Rasi Palan)
சிம்மம் ராசி அல்லது லக்கினம் சார்ந்த நபர்களுக்கு யோக பலன்கள் அதிகளவில் பெறும் காலகட்டம். பழைய கடன்களை அடைத்து முடிப்பீர்கள். கடன்களை அடைத்து முடிப்பதற்கான முயற்சிகளில் வெற்றி பெறும் யோகம் உண்டாகும். பிள்ளைகள் விஷயத்தில் ஏற்றம் ஏற்படும். அவர்களுடைய படிப்பு, உத்தியோகம், தொழில், வியாபாரம், தொலைதூரப் பயணங்கள், சுற்றுலாப் பயணங்களில் அனுகூலம் ஏற்படும்.
யோகம்
பாக்கிய ஸ்தானத்தில் ராசியாதிபதி இருப்பதால் நிறைய யோகம் ஏற்படும். வெளிநாடு செல்லும் யோகம் உண்டாகும். கல்வியில் ஏற்றம் ஏற்படும். முடியாது என்று சொல்லும் விஷயங்களை செய்து முடிப்பீர்கள். இரவுப் பயணங்களைத் தவிர்ப்பது நல்லது. உறவினர்களின் ஆரோக்கியத்தில் பாதிப்புகள் வருவதற்கான வாய்ப்புள்ளது. 4, 5 ஆம் இடத்தில் இருக்கும் சந்திரன் மனதை தொந்தரவு செய்வதற்கான வாய்ப்புள்ளது.
முன்னேற்றம்
உத்தியோகம் ரீதியாக நல்ல முன்னேற்றம் ஏற்படும். விடுபட்ட தெய்வ வழிபாடுகளைச் செய்து முடிப்பீர்கள். ஆரோக்கியத்தில் மிகுந்த கவனமாக இருப்பது நன்மை பயக்கும். வயிறு, ஹார்மோன் தொடர்பான பாதிப்புகளில் கவனம் தேவை. இழுபறியாக இருந்த நிலைமைகள் எல்லாம் பரிபூரணமாக நீங்கும். அனைத்து விஷயத்திலும் முன்னேற்றத்தையும், வளர்ச்சியையும் காண்பீர்கள்.
தடங்கல் நீங்கும்
செல்வாக்குகள் கூடும். உத்தியோகத்தில் தொடர்ச்சியாக இருந்து வந்த தடங்கல்கள் நீங்கும். புதிய பொறுப்புகள் வந்து சேரும். பெரிய மனிதர்களை சந்திக்கக்கூடிய யோகம் உண்டாகும். நீண்டநாட்களாக இருந்து வந்த மனக் குறைகள் நீங்கும். எல்லா விஷயத்திலும் ஏற்றம் ஏற்படும். தொழிலில் இழந்த இடங்களை மீண்டும் பெறக்கூடிய யோகம் உண்டு.
கவனம்
பெரியவர்களின் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. புதிய முடிவுகளில் வெற்றி பெறும் யோகம் உண்டாகும். பெண்களுக்கு வேலை நன்றாக இருக்கும். கையெழுத்து போடும் பதவியில் உள்ள நபர்கள், பணம் கையில் வைத்திருப்பவர்கள் கவனமாக இருக்க வேண்டும். பெண்களால் பிரச்சனைகள் வரும் வாய்ப்புள்ளதால் கவனம் தேவை. கொழுப்பு தொடர்பான விஷயங்களில் கவனம் தேவை.
வழிபாடு
நரம்பு சம்பந்தப்பட்ட விஷயங்களில் கவனம் தேவை. விநாயகர் வழிபாடு செய்வது ஏற்றத்தை ஏற்படுத்தும். சந்தோஷம் ரீதியாக 70 சதவீதமும், பொருளாதார ஏற்றம் 80 சதவீதமும் நன்றாக இருக்கும். காஞ்சிபுரம் பெருந்தேவி தாயார் வழிபாடு முன்னேற்றத்தையும், வளர்ச்சியையும் ஏற்படுத்திக் கொடுப்பார்.
-
2026 குருப்பெயர்ச்சி: குரு பகவானின் அருளால் மீன ராசிக்கு வாழ்க்கை மாறப் போகிறது! -
கும்ப ராசிக்கு அதிர்ஷ்டத்தை அள்ளி கொடுக்கும் குரு, புதன், சுக்கிரன்.. இந்த விஷயங்களில் மட்டும் கவனம் -
2026 குருப்பெயர்ச்சி: கும்ப ராசிக்கு கிடைக்கும் 5 பெரிய யோகங்கள்!.. லிஸ்ட் பெருசா இருக்கே -
2026 குருப்பெயர்ச்சி: மகர ராசிக்கு வாழ்க்கையை மாற்றும் அதிர்ஷ்ட காலம்! -
குருப்பெயர்ச்சியால் வரப்போகும் மாற்றம்.. மகர ராசிக்கு இந்த வாரம் அடிக்கும் லக்கி ஜாக்பாட் -
குருவின் அருளால் தனுசு ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. 3 அதிர்ஷ்ட நாட்களில் கொட்டும் பணம் -
Meenam: மீன ராசிக்கு குரு அருள் மழை!.. ஜூன் 1-7 வரை பணவரவு, முன்னேற்றம் -
Viruchigam: விருச்சிக ராசிக்கு ராஜயோகம்.. சொல்லி அடிக்கும் யோக காலகட்டம் -
Thulam: துலாம் ராசிக்கு அதிர்ஷ்டம் திரும்புது.. புரோமோஷன் கன்ஃபார்ம் -
கடன் தீரும் அமைப்பு.. சிம்ம ராசிக்கு அடிக்கும் ராஜயோகம்.. இந்த வாரத்தில் குட்நியூஸ் உறுதி -
Rishabam Rasi Palan: ரிஷப ராசிக்கு இந்த வாரம் காத்திருக்கும் மாற்றம்.. எந்ததெந்த விஷயங்களில் கவனம்? -
Kadagam Rasi Palan: கடக ராசிக்கு தொழில் மூலம் அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமான மாற்றம் வரப்போகுது












Click it and Unblock the Notifications