Rasi Palan This Week: கலக்கப்போகும் கன்னி ராசி.. சொந்த வீடு, நிலம் வாங்கும் யோகம்

Subscribe to Oneindia Tamil

Kanni Rasi Palan: மே 4 ஆம் தேதி முதல் மே 10 ஆம் தேதி வரை, சித்திரை 21 ஆம் தேதி முதல் சித்திரை 27 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான கன்னி ராசி பலன்கள், பரிகாரங்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.

2026 புத்தாண்டில் பல்வேறு முக்கிய கிரகங்களின் இடமாற்றம் நடைபெறவுள்ளன. ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.

kanni-rasi-palan-what-kind-of-benefit-will-get-kanni-rasi-people-from-may-4-th-to-10th

சித்திரை மாதம் பிறந்துள்ளது. சித்திரை என்பது சூரியன் கன்னிக்கு வரக்கூடிய மாதமாகும். அந்த வகையில், மே 4 ஆம் தேதி முதல் மே 10 ஆம் தேதி வரை, சித்திரை 21 ஆம் தேதி முதல் சித்திரை 27 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான கன்னி ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம்.

கன்னி ராசி பலன் (Kanni Rasi Palan)

கன்னி ராசி அல்லது லக்கினம் சார்ந்த நபர்களின் வார்த்தைகளுக்கு மதிப்பு அதிகரிக்கும். இழுபறியாக இருந்த சிக்கல்கள் பரிபூரணமாக நீங்கும். கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள். பசு மாடுகளுக்கு உணவளிப்பது நன்மை பயக்கும். மேலதிகாரிகள் விஷயத்தில் கவனமாக இருப்பது நன்மை பயக்கும். சில விஷயங்கள் உங்களுக்கு கிடைப்பது போல வந்து கிடைக்காமல் போவதற்கான வாய்ப்ப்புள்ளது.

கவனம்

விரயங்கள் அதிகமாக இருப்பதால் விலை உயர்ந்த பொருள்கள் விஷயத்தில் கவனம் தேவை. பிள்ளைகளிடம் கோபத்தை தவிர்க்க வேண்டும். குடும்பத்தில் அந்நியோன்யம் குறையாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். துணை விஷயத்தில், கூட்டாளிகள் விஷயத்தில் கவனம் தேவை. கூட்டாளிகள் எதிரிகளாக மாறுவதற்கான வாய்ப்புள்ளது.

ஆரோக்கியம்

தூக்கமின்மை, மன அழுத்தம் ஏற்படுவதற்கான வாய்ப்பு ஏற்படும். குலதெய்வ கோயில்களுக்குச் சென்று வருவது சந்தோஷத்தை ஏற்படுத்தும். உங்கள் மீது உரிமையாக கோபமாகப் பேசுபவர்களை நல்லது. புகழ்ந்து கொண்டே இருப்பவர்களி தள்ளியிருப்பது நன்மை பயக்கும். கணவர் மனைவி உடல்நலனிலும், மனைவி கணவர் உடல்நிலையையும் கவனமாகப் பார்த்துக் கொள்வது நல்லது.

வெற்றி மேல் வெற்றி

பாக்கிய ஸ்தானத்தில் சுக்கிரன் இருப்பதால் அனைத்து விஷயத்திலும் வெற்றிகள் ஏற்படும். பயணங்கள் மேற்கொள்வீர்கள். வண்டி, வாகனங்களை வாங்குவதற்கான யோகம் உண்டாகும். இடம் வாங்குவது, வீடு வாங்குவது போன்ற அனுகூலங்கள் ஏற்படும். அரசியல்வாதிகளுக்கு சங்கடங்கள், பிரச்சனைகள் இருந்தாலும் வெற்றிகள் பெறுவதற்கான வாய்ப்புள்ளது.

தொழில்

புதிய விஷயங்களை செய்யும்போது வெற்றிகளைப் பெறும் யோகம் உண்டாகும். பஞ்சம ஸ்தானத்தில் சந்திரன் இருப்பது வேலை, வங்கி, உத்தியோகம், பேராசிரியர்கள், பூஜை, ஆன்மீகம் தொடர்பான விஷயங்களில் இருப்பவர்களுக்கு ஏற்றம் ஏற்படும். நினைத்த காரியங்களில் வெற்றி பெறும் யோகம் உண்டாகும்.

வழிபாடு

ருத்ரனுக்கு ருத்ராபிஷேகம் செய்வது, பைரவர் வழிபாடு சகலவிதத்தில் ஏற்றத்தை ஏற்படுத்தும். ஞாயிற்றுக்கிழமை மதியம் 1 மணி முதல் 2 மணிக்குள் உணவு தானமாகக் கொடுப்பது, எலுமிச்சை ஊறுகாய் தானமாக கொடுப்பது நன்மை பயக்கும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+