For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இந்தியா போனா உஷாரா இருங்க..போராட்டங்கள் நடக்குது: கலாய்க்கும் சீனா

By Mathi
Google Oneindia Tamil News

பெய்ஜிங்: பெட்ரோல் விலை உயர்வுக்கு எதிரான போராட்டங்கள் பல்வேறு நகரங்களில் நடந்து வருவதால் இந்தியா செல்வோர் உஷாராக இருக்க வேண்டும் என்று அந்நாட்டினருக்கு சீனா எச்சரிக்கை விடுத்துள்ளது.

சீனாவின் வர்த்தகர்கள் பிணைக்கைதிகளாக பிடித்து வைக்கப்பட்ட விவகாரத்தில் சீனாவுக்கு செல்வோருக்கு இந்தியா எச்சரிக்கை விடுத்ததற்கு பதில் நடவடிக்கையாக இது கருதப்படுகிறது.

சீன வெளியுறவு அமைச்சக இணையதளத்தில் விடுக்கப்பட்டுள்ள இந்த எச்சரிக்கையில், இந்தியாவில் பல்வேறு நகரங்களில் போராட்டங்கள், வேலை நிறுத்தங்கள் நடைபெற்று வருகின்றன. போக்குவரத்தும் கடுமையாகப் பாதிக்கப்பட்டு வருகிறது. இதனால் சீனர்கள் தங்களை பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்று உஷார் ரிப்போர்ட் போட்டுள்ளது.

சீனாவில் நடைபெற உள்ள சாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா கலந்து கொள்ள உள்ள நிலையில் சீனாவின் இந்த கலாய்ப்பு இந்தியாவை கடுப்பேற்றியிருக்கிறது.

English summary
China has cautioned its citizens against travelling to India because of protests held in different cities over the increase in petrol prices.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X