மதுரை அருகே கிறிஸ்தவ மத போதகர் படுகொலை

Subscribe to Oneindia Tamil

மதுரை: மதுரை அருகே கிறிஸ்தவ மத போதகர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மாவட்டம் ஒத்தக்கடை அருகே உள்ள ராஜகம்பீரம் 4 வழிச் சாலையில் ஒரு மோட்டார் சைக்கிள் அனாதையாகக் கிடந்தது. அதன் அருகில் சுமார் 50 வயது மதிக்கத்தக்க ஒருவர் தலையில் கல்லை போட்டு படுகொலை செய்யப்பட்டு கிடந்தார். இது குறித்து ஒத்தக்கடை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

சம்பவ இடத்திற்கு விரைந்து செனற போலீசார் அந்த உடலை கைப்பற்றி அதை பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில் அவரது பெயர் வில்சன் (54) என்றும், சென்னை நுங்கம்பாக்கத்தைச் சேர்ந்தவர் என்றும் தெரிய வந்தது. படுகொலை செய்யப்பட்ட வில்சன் கிறிஸ்தவ மத போதகர் ஆவார்.

அவர் சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு மோட்டார் சைக்கிளில் கிறிஸ்தவ மத பிரச்சார பயணம் மேற்கொண்டார். பிரசங்கத்தை முடித்துக் கொண்டு மதுரை திரும்பும் போது அவரை வழிமறித்த மர்ம ஆசாமிகள் பணத்திற்காக அவரை கொலை செய்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.

இந்த கொலை குறித்து ஒத்தக்கடை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+