மக்கள் விரும்பியதால் அதிமுகவுடன் சேர்ந்தோம், ஆனா தப்பாப் போச்சே.. பிரேமலதா

புதுக்கோட்டை தொகுதியில் தேமுதிக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் என். ஜாகீர் உசேனை ஆதரித்து திருவப்பூர் பகுதியில் பிரசாரம் செய்தார் பிரேமலதா. அப்போது அவர் பேசுகையில்,
திமுக ஆட்சியில் 5 இடைத்தேர்தல்களை அதிமுக புறக்கணித்தது. சங்கரன்கோவில் இடைத்தேர்தலில் டெபாசிட் இழந்ததால் புதுக்கோட்டை இடைத்தேர்தலை திமுக புறக்கணித்துள்ளது. இதேபோல, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகளும் புறக்கணித்துள்ளன.
ஆனால் கட்சி தொடங்கியதில் இருந்து அனைத்துத் தேர்தல்களையும் சந்திக்கும் கட்சியாக தேமுதிக திகழ்கிறது. இந்தத் தொகுதி இடைத்தேர்தலில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி போட்டியிட்டிருந்தால் தேமுதிக ஆதரித்திருக்கும்.
மக்கள் விரும்பியதால்தான் கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்தோம். ஆனால், அது தவறு என்பதை இந்த ஓராண்டு கால ஆட்சியில் அதிமுக நிரூபித்துவிட்டது.
தேர்தல் ஆணையத்தின் அனுமதியுடன்தான் பிரசாரம் செய்கிறோம். ஆனால், காவல் துறையினர் மூலம் எங்களை தடுத்து விடலாம் என்ற முயற்சி பலிக்காது.
புதுக்கோட்டையில் குடிநீர்த் தட்டுப்பாடு தலைவிரித்தாடுகிறது, 5 நாள் 10 நாள்களுக்கு ஒருமுறைதான் குடிநீர் கிடைக்கும் அவலம் நீடிக்கிறது, இதை சரிசெய்ய எந்த வித நடவடிக்கையையும் இங்கு குவிந்துள்ள 32 அமைச்சர்களும் செய்ய முன்வரவில்லை.
தேதிமுக ஆட்சிக்கு வந்தால் நதிகளை இணைத்து, தண்ணீர் பிரச்னையை அடியோடு தீர்க்கும். சொந்த செலவில் தினமும் லாரிகள் மூலம் குடிநீர் இலவசமாக அளிக்கப்படும் என்றார் பிரேமலதா.












Click it and Unblock the Notifications