கார்கில் போர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார் 'கர்னல்' டோணி!

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனான டோணியின் சிறப்பாக ஆட்டத்தை பாராட்டி, இந்திய ராணுவம் அவருக்கு கெளரவ லெப்டினன்ட் கர்னல் பதவி அளித்துள்ளது. தற்போது கிரிக்கெட் போட்டிகள் இல்லாமல் ஓய்வில் உள்ள டோணி, காஷ்மீரில் உள்ள இந்திய எல்லை பகுதிகளை பார்வையிட்டு வருகிறார்.
5 நாட்கள் கொண்ட சுற்றுப்பயணத்தின் இறுதி நாளான நேற்று உலகின் மிகவும் உயர்ந்த மற்றும் ஆபத்தான போர்க்களமான சியாச்சின் பகுதிக்கு செல்ல திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் மோசமான வானிலை மற்றும் பாதுகாப்பு கருதி டோணியின் பயணம் ரத்து செய்யப்பட்டது.
இதையடுத்து கடந்த 1999ம் ஆண்டு போர் நடந்த கார்கில் பகுதிக்கு டோணி அழைத்து செல்லப்பட்டார். ராணுவ சீருடையில் சென்ற டோணிக்கு, பிரிகேடியர் ஷமி ராஜ் சிறப்பான வரவேற்பு அளித்தார். கார்கில் போரில் உயர்நீத்த வீரர்களின் நினைவிடத்திற்கு சென்ற டோணி அஞ்சலி செலுத்தினார். அதன்பிறகு கார்கிலை அடுத்த கக்சார் பகுதியில் உள்ள ராணுவ அதிகாரிகள், வீரர்கள் மற்றும் கிராம மக்களுடன் டோணி உரையாடினார்.
தனது சுற்றுப்பயணத்தை குறித்து டோணி கூறுகையில், இந்திய எல்லைப் பகுதியில் உள்ள கடினமான சூழ்நிலைகளை தாங்கி கொண்டு நமது வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளது எனக்கு பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது என்றார்.
இது குறித்து லெப்டினன்ட் கர்னல் ராஜேஷ் காலியா கூறியதாவது
கார்கில் போர் நினைவிடத்திற்கு வந்த டோணி அஞ்சலி செலுத்தினார். இந்திய எல்லைப் பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள ராணுவ வீரர்களுக்கு டோணி உடனான சந்திப்பு பெரும் உற்சாகத்தை அளித்துள்ளது என்றார்.
கடந்த 5 நாட்களாக காஷ்மீரில் உள்ள இந்திய எல்லை பகுதிகளை பார்வையிட்ட கேப்டன் டோணி, சுற்றுப்பயணத்தை முடித்து கொண்டு இன்று டெல்லிக்கு திரும்புகிறார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications