தூத்துக்குடி-விதிகளை மீறிய 37 தனியார் பள்ளி வாகனங்களுக்கு அபராதம்
தூத்துக்குடி: தூத்துக்குடியில் விதிமுறை மீறிய 37 தனியார் பள்ளி வாகனங்களுக்கு போக்குவரத்துறை அதிகாரிகள் அபராதம் விதித்தனர்.
பள்ளி வாகனங்களில் அளவுக்கு அதிகமாக மாணவர்களை ஏற்றிச் செல்லக் கூடாது என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதனையடுத்து தமிழகத்தில் ஒரு சில மாவட்டங்களில் மட்டும் போக்குவரத்து அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தி விதிமுறை மீறும் பள்ளி வாகனங்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
இந்த நிலையில் தூத்துக்குடி ஆர்.டி.ஓ. தங்கவேல், ஆய்வாளர்கள் சந்திரசேகரன், பாத்திமா பர்வின் ஆகியோர் தூத்துக்குடி குரூஸ் பர்னாந்து சிலை அருகே திடீர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அளவுக்கு அதிகமாக பள்ளி மாணவர்களை ஏற்றி வந்த 37 தனியார் பள்ளி வாகனங்களை மடக்கி விசாரணை நடத்தினர். பின்பு அந்த வாகனங்கள் விதிமுறைகளை மீறியது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அந்த வாகனங்களுக்கு அதிகாரிகள் அபராதம் விதித்தனர்.
மேலும், வாகன உரிமை இல்லாமல் இயங்கிய பள்ளி பேருந்து ஒன்றும், 2 பள்ளி வேன்களும் பறிமுதல் செய்யப்பட்டது. தூத்துக்குடி மாவட்டத்தில் இயங்கி வரும் பள்ளி வாகனங்களில் தொடர்ந்து சோதனை நடத்தப்படும் என்று போக்குவரத்து அதிகாரிகள் வட்டாரத்தில் கூறப்படுகின்றது.
-
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்!












Click it and Unblock the Notifications