For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஜெட் வேகத்தில் உயரும் அரிசி விலை: மக்கள் கவலை

Google Oneindia Tamil News

Rice
நெல்லை: அரிசி விலை தங்கம் விலை போல் தினமும் உயர்ந்து வருகிறது. ஆந்திராவில் இருந்து அரிசி வரத்து குறைந்துள்ளதால் மேலும் 3 மாதங்களுக்கு விலை உயர வாய்ப்பு உள்ளது.

தமிழகத்தில் பொதுவாக ஏப்ரல், மே, ஜூன் மாதங்களில் அரிசி விலை குறைவது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு வழக்கத்திற்கு மாறாக கடந்த ஒரு வாரமாக அரிசி விலை ஜெட் வேகத்தில் உயர்ந்து வருகிறது. குறிப்பாக ஆநதிராவில் இருந்து வரும் முதல் தர பொன்னி அரிசி விலை உயர்ந்துள்ளது. 50 கிலோ பொன்னி அரிசி மூட்டை ரூ.925ல் இருந்து நேற்று முன்தினம் ரூ.950 ஆகவும், நேற்று ரூ.975 ஆகவும் உயர்ந்தது.

ஐஆர் 20 ரகத்தி்ல் பாவூர்சத்திரம் அரிசி 100 கிலோ மூட்டை ரூ.2,300 ஆகவும், மதுரை ஐஆர் 20 கிலோ ரூ.2,450 ஆகவும் விற்கப்படுகிறது. இது போல் டீலக்ஸ் பொன்னி அரிசி பாவூர்சத்திரம் மூட்டை ரூ.2,200ல் இருந்து ரூ.2,600க உயர்ந்துள்ளது. மதுரை பொன்னி ரூ.2,600ல் இருந்து ரூ.3,000க உயர்ந்துள்ளது. இதனால் சில்லரை விலையும் கிலோவுக்கு ரூ.7 வரை உயர்ந்துள்ளது.

ஏற்கனவே காய்கறி விலைகள் அதிகரி்த்துள்ள நிலையில் தற்போது அரிசி விலையும் உயர்வது மக்களை கவலை அடையச் செய்துள்ளது.

English summary
Rice prices are increasing day by day. People who are already worried about the vegetable price rise is saddened by the rice price now.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X