காதலியை மணக்க காத்திருந்த மாப்பிள்ளையை ஆசிட் ஊற்றி குருடாக்கிய காதலர்!
லக்னோ: உ.பி. மாநிலத்தில் தனது காதலிக்கு நிச்சயிக்கப்பட்டிருந்த மாப்பிள்ளை மீது ஆசிட் ஊற்றி படுகாயப்படுத்தி விட்டார் காதலர்.
உ.பி. மாநிலத்தின் ரதன்பூர் கிராமத்தில்தான் இந்த சம்பவம் நடந்துள்ளது. அந்த ஊரைச் சேர்ந்தவர் ராஜாராம். அதே ஊரைச் சேர்ந்த ஒரு பெண்ணைக் காதலித்து வந்தார்.
ஆனால் காதலியின் பெற்றோர் அவருக்கு வேறு ஒரு மாப்பிள்ளையைப் பார்த்து முடிவு செய்து விட்டனர். இதனால் கோபமடைந்த ராஜாராம், தனது காதலிக்குப் பேசியிருந்த மாப்பிள்ளையைப் போய்ப் பார்த்தார். இங்கே பாரப்பா, நான் காதலிக்கும் பெண்ணைத்தான் உனக்குப் பேசியுள்ளனர், பேசாமல் விலகிச் செல் என்று கூறியுள்ளார்.
ஆனால் அதை அந்த மாப்பிள்ளை கேட்கவில்லை. இதனால் வெகுண்ட அந்த மாப்பிள்ளை மீது மறைத்து வைத்திருந்த ஆசிட்டை எடுத்து ஊற்றினார். இதில் புது மாப்பிள்ளையம், அவருக்கு அருகில் நின்றிருந்த இரண்டு சிறார்களும் படுகாயமடைந்தனர்.
இதில் புது மாப்பிள்ளைக்கு வலது கண் கடுமையாக பாதிக்கப்பட்டு பார்வை பறி போய் விட்டது.
இந்த சம்பவத்தைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் ராஜாராமை வளைத்துப் பிடித்து போலீஸாரிடம் ஒப்படைத்தனர்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications