For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அமெரிக்காவில் பெண் கொலையில் தேடப்பட்ட பெங்களூர் சாப்ட்வேர் என்ஜினியர் மர்ம சாவு!

By Chakra
Google Oneindia Tamil News

Pawan Kumar Anjaiah
பெங்களூர்: அமெரிக்கப் பெண் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த பெங்களூரைச் சேர்ந்த சாப்ட்வேர் என்ஜினியர் அமெரிக்காவின் நியூஜெர்சி நகர ஹோட்டலில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.

பெங்களூர் ஆர்.டி. நகரைச் சேர்ந்த பவன்குமார் அஞ்சய்யா (26) காக்னிசன்ட் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். பணி நிமித்தமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் அமெரிக்காவுக்கு H-1B விசாவில் அனுப்பப்பட்டார்.

இந் நிலையில் கடந்த 18ம் தேதி டெலாவேர் நகரில் டிவே பீச் அருகே ஒரு ஹோட்டலில் டெனில் மெஹ்லாம் என்ற 26 வயதுப் பெண் உடல் முழுவதும் கத்திக் குத்துக் காயங்களுடன் பிணமாகக் கிடந்தார்.

4 வயது குழந்தைக்குத் தாயான இவர் ஒரு ஆசிரியை ஆவார். இந்தக் கொலை நடந்த அன்று மெஹ்லாமுடன் பவன் குமார் ஒரே அறையில் இருந்தது அந்த ஹோட்டலின் சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.

இதையடுத்து பவன்குமாரை போலீசார் தேடி வந்தனர். இந் நிலையில் அடுத்த நாளான 19ம் தேதி நியூஜெர்சியின் வெயின் கவுண்டி பகுதியில் உள்ள பெல்லேவில்லா மோட்டர் லாட்ஜில் பவன்குமார் பிணமாகக் கிடந்தார். அதிகமான போதை மருந்தையும் மதுவையும் உட்கொண்டதால் அவர் பிணமானதாகத் தெரியவந்துள்ளது.

மெஹ்லாமுடன் ஆன்லைன் டேட்டிங் இணையத்தளம் மூலம் பவன்குமாருக்கு பழக்கம் ஏற்பட்டதாகவும் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

English summary
A 26-year-old techie from Bangalore, who was in the US on an assignment, allegedly committed suicide in a New Jersey hotel room last week. He was wanted in connection with the murder of an American woman. Pawan Kumar Anjaiah, a software engineer with business and technology services major Cognizant, died allegedly of drug overdose, according to US media reports quoting Delaware state police. He died in a room in Belleville city of Wayne county in New Jersey state on June 19.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X