பிரமலைக்கள்ளர் சீரமைப்பு பள்ளிகளுக்கு நிதி ஒதுக்கீடு-முதல்வருக்கு சேதுராமன் நன்றி
சென்னை: பிரமலைக்கள்ளர் சீரமைப்பு பள்ளிகளுக்காக நிதி ஒதுக்கீடு செய்துள்ள தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு, அகில இந்திய மூவேந்தர் முன்னணி கழகத்தின் நிறுவன தலைவர் என்.சேதுராமன் நன்றி தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
பிரமலைக்கள்ளர் இன மக்கள் பயனடையும் வகையில் தமிழகத்தில் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட நலத்துறையின் கீழ் மதுரை, திண்டுக்கல், தேனி ஆகிய மாவட்டங்களில் அதிகமாக வசிக்கும் பிரமலைக் கள்ளர் வகுப்பை சார்ந்த மக்களின் நலனுக்காக 24 மேல்நிலைப் பள்ளிகள், 25 உயர் நிலைப்பள்ளிகள், 25 நடுநிலைப் பள்ளிகள், 211 ஆரம்ப பள்ளிகள் என்று மொத்தம் 285 அரசு கள்ளர் சீரமைப்பு பள்ளிகள் இயங்கி வருகின்றன. அவற்றில் 37,556 மாணவ, மாணவியர்கள் கல்வி பயின்று வருகின்றனர்.
தமிழக முதல்வர் ஜெயலலிதா மாநிலத்தில் பெரும்பான்மையாக வாழ்கிற முக்குலத்தோர் சமுதாய மக்களில் பிரமலைக் கள்ளர் இன மக்கள் பயன்பெறும் வகையில் உருவாக்கப்பட்ட பிரமலைக் கள்ளர் சீரமைப்பு நலப் பள்ளிகளுக்கு ஆண்டுக்கு ரூ.1 கோடியே 39 லட்சத்து 42 ஆயிரத்து 80 நிதி ஒதுக்கீடு செய்து பள்ளிகளை தரம் உயர்த்தி உள்ளார்.
கடந்த திமுக ஆட்சியில் முடங்கி போகும் நிலையில் இருந்த இப்பள்ளிகளை தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் அரசு மீண்டும் மறுசீரமைப்பு செய்து, கள்ளர் இன மக்களின் மாணவ, மாணவியர் கல்வி பயலும் வகையில் நிதி ஒதுக்கீடு செய்துள்ளார். இதற்காக தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு அகில இந்திய மூவேந்தர் முன்னணி கழகம் சார்பாக நன்றியை தெரிவித்து கொள்கிறேன் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications