இந்த ஐந்து பெண்களும் செய்த காரியத்தைப் பாருங்களேன்...!

Subscribe to Oneindia Tamil

Marshall girl
உலகிலேயே இப்படிப்பட்ட ஒரு விஷயத்தை செய்து முடித்த ஒரே குடும்பம் இதுவாகத்தான் இருக்க முடியும். விஷயம் வேறொன்றுமில்லை. இங்கிலாந்தைச் சேர்ந்த சாண்டல் மார்ஷல் என்பவரும், அவரது நான்கு மகள்களும் இதுவரை தங்களது மார்பகங்களை பெரிதாக்குவதற்காக 13 முறை ஆபரேஷன் செய்துள்ளனராம். தற்போது தங்களது ஐந்தாவது மகளது மார்பகத்தையும் பெரிதாக்க ஆபரேஷன் செய்யப் போகிறார்களாம்.

கேட்கவே வினோதமாக இருக்கிறதல்லவா.. தொடர்ந்து படியுங்கள் இன்னும் களேபரமாக இருக்கும்...

லண்டனைச் சேர்ந்தவர் சாண்டல் மார்ஷல். இவருக்கு 53 வயதாகிறது. இவரது மகள்கள் 30 வயது எம்மா, 21 வயது ரிப்ளி, 27 வயது டெர்ரி, 26 வயது தாரா.

இந்த ஐந்து பேரும் தங்களது மார்பகங்களை யூனிபார்மாக பெரிதாக்கியுள்ளனர். இதற்காக இதுவரை ஐந்து பேரும் சேர்ந்து மொத்தம் 13 முறை ஆபரேஷன் செய்துள்ளனராம்.

இந்த ஐந்து பேரில் தற்போதைக்கு பெரிய மார்பகத்துடன் வலம் வருபவர்கள் டெர்ரியும், தாராவும்தான். இவர்களில் டெர்ரிக்கு 3 முறை மார்பகத்தைப் பெருக்க ஆபரேஷன் செய்துள்ளனர். தாராவுக்கு 2 வாட்டி செய்துள்ளனர்.

அம்மா சாண்டலுக்கு மொத்தம் 4 முறை ஆபரேஷன் செய்துள்ளனராம். எம்மாவுக்கு 3 முறையும், ரிப்ளிக்கு ஒருமுறையும் ஆபரேஷன் செய்துள்ளனர். இந்த ஐந்து பேருக்கும் 13 முறை ஆபரேஷன் செய்ததன் மூலம் மொத்தம் 3 லிட்டர் சிலிகானை மார்பகத்தில் சேர்த்துப் பெரிதாக்கியுள்ளனராம்.

இங்கிலாந்திலேயே அதிக அளவில் மார்பகப் பெருக்க ஆபரேஷன் செய்த குடும்பம் இதுதானாம். ஐந்து பேரும் தெருவில் இறங்கி நடந்தால் அத்தனை பேரின் பார்வையும் இவர்களின் மார்பகங்கள் மீதுதான் விழுமாம். அவ்வளவு பெரிதாக்கியுள்ளனர்.

இந்த நிலையில் 14 வயதாகும் தனது கடைசி மகள் பிரிட்னிக்கும் ஆபரேஷன் செய்து மார்பகத்தை பெரிதாக்கத் திட்டமிட்டுள்ளாராம் அம்மா சாண்டல். பிரிட்னி பள்ளிக்கூடத்தில் படித்து வருகிறார். வழக்கமான சைசில்தான் அவருக்கு தற்போது மார்பகம் உள்ளது. ஆனால் தங்களுக்கு ஈக்வலாக பிரிட்னியின் மார்பகத்தையும் மாற்றி விட அம்மா முடிவெடுத்துள்ளாராம். பிரிட்னியும் அதற்கு ஓ.கே சொல்லி விட்டாராம். இருப்பினும் 18 வயதில்தான் இந்த ஆபரேஷனை செய்வது சரியாக இருக்கும் என்பதால் அதுவரை வழக்கமான சைசிலேயே உலா வருவாராம் பிரிட்னி.

இதுகுறித்து அம்மா சாண்டல் கூறுகையில், எனது மகள்களுக்கும், எனக்கும் பெரிய மார்பகங்கள் இருப்பதைப் பார்க்கவே பெருமையாக, சந்தோஷமாக இருக்கிறது. இதை நாங்கள் விரும்புகிறோம். விரைவில் பிரிட்னியும் தனது சகோதரிகளைப் போலவே பெரிய மார்பகத்துக்கு மாறி விடுவாள்.

மார்பகங்களைப் பெரிதாக்கி இருப்பதால் நாங்கள் ஐந்து பேருமே கவர்ச்சிகரமாக காட்சி அளிக்கிறோம். மேலும் எங்களுக்கு ஒரே மாதிரியாக மார்பகங்கள் இருப்பதும் தமாஷாக இருக்கிறது.

அதை விட காமெடி என்னவென்றால், என்னைப் பார்த்து நீங்க யாரு இவங்களுக்கு தங்கச்சியா என்று எனது மகள்களைக் காட்டி சிலர் கேட்பார்கள். எனக்கு வெட்கமாகப் போய் விடும் என்று கூறி கலகலவென சிரிக்கிறார்.

அடேங்கம்மா....!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+