For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

9% பொருளாதார வளர்ச்சியெல்லாம் சாத்தியமே இல்லை: அடித்து சொல்கிறார் மான்டேக்சிங் அலுவாலியா

By Mathi
Google Oneindia Tamil News

Economic Growth
டெல்லி: நாட்டில் அடுத்த 5 ஆண்டுகளில் 9 விழுக்காடு பொருளாதார வளர்ச்சி என்பது சாத்தியம் இல்லை என்று திட்டக் குழு துணைத் தலைவர் மான்டேக்சிங் அலுவாலியா தெரிவித்துள்ளார்.

டெல்லியில் மாநில திட்டக் குழுத் தலைவர்கள் கூட்டத்தில் கலந்து கொண்ட பின் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

வரும் 5 ஆண்டுகளுக்கு சராசரியான பொருளாதார வளர்ச்சி 9 விழுக்காடு என்ற நிலையைக் கூட எட்ட முடியாது. 8 முதல் 8.5 விழுக்காடு வளர்ச்சி சாத்தியமாகலாம். அதற்கும் கூட கடுமையான முயற்சிகள் தேவை.

சர்வதேச அளவில் ஏற்பட்டுள்ள பொருளாதர மந்தநிலை நமது நாட்டையும் மறைமுகமாக பாதித்துள்ளது. 12-வது ஐந்தாண்டுத் திட்டத்தின் முதல் ஆண்டில் பொருளாதார வளர்ச்சி விகிதம் 6.5 விழுக்காடு முதல் 7 விழுக்காடுதான் இருக்கும் என்றார் அவர்.

இந்தியா 9 விழுக்காடு பொருளாதார வளர்ச்சியை எட்டும் என்று அலுவாலியா கடந்த ஆண்டு நம்பிக்கைத் தெரிவித்திருந்தார். அதுவே இலக்காகவும் நிர்ணயிக்கப்பட்டிருந்தது. ஆனால் இந்த ஆண்டில் பொருளாதார வளர்ச்சி 6.5 சதவீதம் என்ற அளவுக்குக் குறைந்துவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
In view of deteriorating global economic situation over the last one year, achieving average growth rate of 9 per cent in the next five years is not possible, and it may be 8-8.5 per cent, Planning Commission Deputy Chairman Montek Singh Ahluwalia today said.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X