For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

குடியரசுத் தலைவர் தேர்தலில் 4 மாநிலங்களில் முழு வாக்குகளையும் பெறுகிறார் பிரணாப் முகர்ஜி

By Mathi
Google Oneindia Tamil News

Pranab Mukherjee
டெல்லி: குடியரசுத் தலைவர் தேர்தலில் கேரளா, திரிபுரா, நாகாலாந்து மற்றும் சிக்கிம் ஆகிய 4 மாநிலங்களில் அனைத்து வாக்குகளும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் வேட்பாளர் பிரணாப் முகர்ஜிக்கே கிடைக்கும் நிலை இருக்கிறது.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, புரட்சிகர சோஷலிஸ்ட் கட்சி ஆகியவை குடியரசுத் தலைவர் தேர்தலில் வாக்களிக்கப் போவதில்லை என்று அறிவித்திருக்கின்றன. இதனால் கேரளா மற்றும் திரிபுராவில் அனைத்து எம்.பிக்கள், எம்.எல்.ஏக்கள் வாக்குகளும் அப்படியே பிரணாப் முகர்ஜிக்கே செல்லப் போகிறது. நாகலாந்து மற்றும் சிக்கிம் மாநிலங்களிலும் இதெ நிலைதான் இருக்கிறது.

குடியரசுத் தலைவர் தேர்தலில் வெற்றிக்குத் தேவையா 5,49,442 வாக்குளைவிட கூடுதலாக 6.50 லட்சம் வாக்குகளைப் பிரணாப் முகர்ஜி பெறப் போகிறார்.

தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள ஐக்கிய ஜனதா தளம் மற்றும் சிவசேனா ஆகியவை பிரணாப் முகர்ஜியை ஆதரிப்பதால் அவரை எதிர்த்துப் போட்டியிடும் பி.ஏ.சங்மாவுக்கு மொத்தம் 3.20 லட்சம் வாக்குகள்தான் கிடைக்கும். ஒருவேளை திரிணாமுல் காங்கிரஸ் ஆதரித்தால் 3.65 லட்சம் வாக்குகள்தான் சங்மாவுக்குக் கிடைக்கும்.

கேரள மாநிலத்தில் மொத்தம் 140 எம்.எல்.ஏக்கள், 29 மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்கள் மூலமாக மொத்தம் 41,812 வாக்குகள் இருக்கின்றன. இதில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் புரட்சிகர சோஷலிஸ்ட் ஆகியவை தேர்தலைப் புறக்கணித்தால் 2,988 வாக்குகள் கிடைக்காத நிலையில் பிரணாப் முகர்ஜிக்கு மொத்தம் 38,830 வாக்குகள் கிடைக்கும்.

இதேபோல் திரிபுராவில் 60 எம்.எல்.ஏக்கள், 3 எம்.பிக்கள் மூலமாக 3,606 வாக்குகளைப் பெறுகிறார் பிரணாப் முகர்ஜி.இந்த மாநிலத்தில் இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் புரட்சிகர சோஷலிஸ்ட் கட்சிகளின் வாக்குகள் மொத்தம் 78தான்.

நாகாலாந்து மற்றும் சிகீம் மாநிலங்களில் 1956, 1640 வாக்குகள் இருக்கின்றன. இவை அனைத்தும் பிரணாப் முகர்ஜிக்கே செல்லக் கூடிய நிலையே இருக்கிறது.

குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிடும் பி.ஏ.சங்மாவின் சொந்த மாநிலமான மேகாலயாஅவில் 3204 வாக்குகள் இருக்கின்றன. நிச்சயமாக இவை அனைத்துமே சங்மாவுக்கு செல்லப் போவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
All the votes in Kerala, Tripura, Nagaland and Sikkim are likely to go in favour of UPA nominee Pranab Mukherjee in the Presidential poll, leaving a blank for Opposition candidate P A Sangma.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X