காஞ்சிபுரத்தில் 16 வயது பெண்ணின் திருமணத்தை தடுத்து நிறுத்திய போலீசார்

Subscribe to Oneindia Tamil

காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் 16 வயது இளம்பெண்ணுக்கு நடைபெற இருந்த திருமணத்தை, போலீசாரின் அறிவுறுத்தலின் பேரில் தடுத்து நிறுத்தப்பட்டது.

காஞ்சிபுரத்தை சேர்ந்தவர் சின்னுஷா. தங்க நகை வியாபாரி. இவரது மகன் பாக்கியநாத்(24). இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த பட்டுநூல் வியாபாரி ராதா கிருஷ்ணன் என்பவரின் மகளுக்கும் நேற்று திருமணம் நடைபெற இருந்தது.

இந்த நிலையில் ராதா கிருஷ்ணனின் மகளுக்கு 16 வயதிலேயே திருமணம் நடக்க உள்ளதாக மாவட்ட கலெக்டர் ஹனீஷ் சாப்ராவிற்கு, கடந்த 7ம் தேதி தகவல் கிடைத்தது. இதையடுத்து உடனடியாக கலெக்டர், இது குறித்து சிவகாஞ்சி போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலசுப்ரமணியத்திற்கு தகவல் அளித்தார்.

உடனடியாக மணமக்களின் வீட்டிற்கு விரைந்து சென்ற போலீசார், 16 வயது பெண்ணிற்கு திருமணம் செய்வது சட்டப்படி குற்றம் என்பதால், திருமணத்தை நிறுத்துமாறு கேட்டு கொண்டனர். இதற்கு தங்களின் இன வழக்கப்படி மணப்பெண்ணிற்கு தகுந்த வயதில் தான் திருமண ஏற்பாடு செய்திருப்பதாக தெரிவித்தனர்.

இருப்பினும் இது குறித்து மணமக்களின் வீட்டார் பேச்சு வார்த்தை நடத்தினர். இதன் முடிவில் சட்டப்படி இந்த திருமணம் குற்றம் என்றால், ஏற்கனவே நிச்சயித்த திருமணத்தை 2 ஆண்டுகளுக்கு பிறகு நடத்தி கொள்வதாக இரு வீட்டாரும் உறுதி அளித்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+